மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி யாராவது ஹார்ன் அடிப்பீங்க.. மும்பை போலீஸ் செய்த வேலையை பாருங்க.. செம ஐடியா!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை காவல்துறை, சாலையில் ஓவராக சத்தம் போட்டு ஹார்ன் அடித்துக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளை சீர்படுத்த ஒரு அருமையான முயற்சி எடுத்துள்ளது. தற்போது இணையதளத்தில் இதுதான் வைரல்.

இது தொடர்பாக மும்பை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அருமையாக அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

Mumbai Police hit the mute button on Mumbai’s reckless honkers

ஹார்ன் அடிப்பதின் தலைநகரம் என்று மும்பையைச் சொல்லலாம். சிக்னல்களில் ரெட் இருக்கும்போதும் கூட வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஹார்ன் அடிப்பதால் வேகமாக ரெட் சிக்னல், கிரீன் சிக்னல் ஆக மாறிவிடும் என்று மக்கள் நம்பும் அளவுக்கு நிலைமை உள்ளது என்று கிண்டலாக சொல்கிறது அந்த வீடியோ.

ஹார்ன் அடிக்காதீர்கள், அது நோயாளிகள், சிறுவர்கள், முதியோர்களுக்கு, ஒரு தொல்லையாக இருக்கும் என்று எத்தனையோ விளம்பரங்கள் செய்தும் எந்த வாகன ஓட்டியும் கேட்பாரில்லை. தானாகவே சிக்னலில் நிற்கும்போதோ, அல்லது சாலையில் செல்லும்போதோ வாகன ஓட்டிகளின் கைகள் ஹார்னை நோக்கி செல்கின்றன.

தூக்கு தண்டனை நிறைவேறாது.. தம்பட்டம் அடிக்கிறார் குற்றவாளிகளின் வக்கீல்.. நிர்பயா தாயார் கதறல்!தூக்கு தண்டனை நிறைவேறாது.. தம்பட்டம் அடிக்கிறார் குற்றவாளிகளின் வக்கீல்.. நிர்பயா தாயார் கதறல்!

முள்ளை முள்ளால் எடுப்பது போல இதற்கு பதிலடியாக மும்பை காவல்துறை ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முக்கியமான சிக்னல்களில் டெசிபல் அளவிடக்கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. 85 டெசிபலுக்கு மேலாக ஒலி அளவு சென்றால் உடனடியாக சிக்னல் எண் 90க்கு சென்றுவிடும்.

பிறகு, 89, 88 என்று குறைய தொடங்கும். ஒருவேளை சிக்னல் நம்பர் குறைந்துகொண்டே வந்து ஐந்து, நான்கு என்று வந்து கொண்டிருக்கும்போது திடீரென வாகன ஓட்டிகள் அதிகம் ஒலி எழுப்பி விட்டால், அதுவும் 85 டெசிபலை தாண்டி விட்டால் மறுபடியும் 90 முதல் எண்ணிக்கை ஆரம்பித்து விடும்.

இதனால் ஹாரன் அடிக்க வாகன ஓட்டிகள் பயப்படுவார்கள். ஒருவேளை யாராவது ஹார்ன் அடித்தாலும், பக்கத்து வண்டிக்காரரே, ஓடிப்போய் அந்த நபரிடம் சண்டைக்குப் போய் விடுவார். இப்படி மக்களே தங்களை தாங்கள் சரிப்படுத்திக் கொள்ளும் சூப்பரான யோசனையை முன் வைத்துள்ளது மும்பை காவல்துறை.

நம்ம ஊருக்கும் இப்படி கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

English summary
Horn not okay, please! Find out how the Mumbai Police hit the mute button on Mumbai’s reckless honkers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X