மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொட்டை மாடியில் நின்றிருந்த அதிகாரி மகள்.. பேன்ட்டைத் திறந்து ஆபாச சைகை செய்த போலீஸ்காரர்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில், போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் அதிகாரியின் மகளிடம், பேன்ட் ஜிப்பைத் திறந்து காட்டி ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மன உளைச்சலே அவரை இத்தகைய செயலை செய்ய வைத்தது என்று கூறி துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Mumbai policeman arrested for flashing towards officers daughter

ஹரிஷ்சந்திர லஹானேவிற்கு 41 வயதாகிறது. பந்த் நகர் காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார். வீட்டில் தனியாக இருக்கும் அவர், சில நேரு நகர் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது வீட்டு மொட்டை மாடிக்கு வந்தார். அப்போது எதிர் மாடியில், ஒரு போலீஸ் அதிகாரியின் மகளான 23 வயதுப் பெண் தனது உறவினரோடு பேசிக் கொண்டிருந்தார்.

அவர்களைப் பார்த்த லஹானே ஆபாசமாக அவர்களை நோக்கி கத்தினார். திட்டினார். பின்னர் டக்கென தனது பேன்ட் ஜிப்பைக் கழற்றி ஆபாசமாக நடந்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உள்ளே ஓடினார். தனது வீட்டில் இருந்தவர்களிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து லஹானேவைக் கைது செய்தனர்.

முதல்வரின் ஊழல் பட்டியல் மே 23ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்.. டிவிஸ்ட் வைக்கும் புகழேந்தி!முதல்வரின் ஊழல் பட்டியல் மே 23ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும்.. டிவிஸ்ட் வைக்கும் புகழேந்தி!

கைது செய்யப்பட்ட லஹானே பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட லஹானேவை விட்டு அவரது மனைவி நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்து போய் விட்டாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் லஹானே. அவரது பெற்றோரும் கூட அவருடன் தங்கவில்லையாம். கடந்த 3 மாதமாக வேலைக்கும் போகவில்லை இவர். குடித்துக் கொண்டே இருந்துள்ளார்.

மன உளைச்சல், மனைவி இல்லாதது, பெற்றோரும் தங்காமல் போனது, தனிமை என எல்லாம் சேர்ந்து லஹானேவை ஆபாச செயல்பாட்டுக்கு கொண்டு போய் விட்டதாக சொல்கிறார்கள்.

English summary
Mumbai police have arrested a policemen for flashing towards a police officer's daughter in his quarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X