மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை.. ரயில்கள் தாமதம்.. ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    MUMBAI RAIN | மும்பை மழை.. சாலைகளில் வெள்ளம்..விமானங்கள் ரத்து.. போக்குவரத்து பாதிப்பு- வீடியோ

    மும்பை: மும்பையின் பல பகுதிகளில் இரவில் பெய்த மழையால் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக இயங்கி வருகின்றன.

    கடும் மழை எச்சரிக்கையால், நகரில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவித்துள்ளனர் அதிகாரிகள்.

    Mumbai Rains: Roads waterlogged, Trains delayed and airlines issue advisory

    கனமழை முதல் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பைக்கு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம், எச்சரித்ததை அடுத்து, பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.

    பலத்த மழையால் இன்று காலை ரயில்கள் தாமதமாக இயங்கின. "பலத்த மழை மற்றும் விஷன் குறைவாக இருப்பதால், பிரதான புறநகர் ரயில்கள் 10-12 நிமிடங்கள் தாமதமாகவும், துறைமுக லைன் ரயில்கள் 10 நிமிடங்கள் தாமதமாகவும் இயங்குகின்றன" என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சேர்ந்துள்ளது. எனவே ரயில்களின் இயக்க வேகம் குறைந்தன. மேற்கு ரயில்வே வெளியிட்ட ட்வீட் ஒன்றில் கூறியது: "நல்லசோபரா ஃபாஸ்ட் லைன்களில் 120 மிமீ தடங்களுக்கு மேல் நீர் மட்டம் எட்டியுள்ளதால், நீண்ட தூர ரயில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. புறநகர் தடைசெய்யப்பட்ட வேகத்தில் இயக்கப்படுகின்றன." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.

    சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை விமான போக்குவரத்து இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை. "10-15 நிமிடங்கள் சிறிய தாமதங்களுடன் விமானங்கள் இயக்கப்படுகின்றன" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    English summary
    People in Mumbai woke up to a rainy morning with water-logging being reported in some parts of the city. Areas like Sion, Parel, Dadar and Byculla received heavy rain in the wee hours. Several trains were also delayed due to the ongoing showers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X