மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லட்டு மோடி எங்கே.. ஜாங்கிரி மோடியை எங்கப்பா காணோம்.. கலகலக்கும் மும்பை ஸ்வீட் கடை!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் ஒரு ஸ்வீட் கடைக்கு திமுதிமுவென ஸ்வீட் ஆர்டர் வந்து குவிந்துள்ளதாம். வந்த ஆர்டர் எல்லாம் பாஜகவிடமிருந்தாம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடைக்காரர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். ஓனர்தான் குஷியாக இருக்கிறார் என்று பார்த்தால் கடை ஊழியர்கள் அதற்கு மேல்... வேற லெவல் சிந்தனைக்குப் போய் விட்டனர். அதற்கு மேல் அவர்கள் செய்த வேலைதான் இந்த செய்திக்கே காரணம்.

எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கப் போவதாக கூறியுள்ளதால் பாஜகவினர் தடபுடலாக தயாராகி வருகின்றனர் மே 23ம் தேதியை வரவேற்க.

ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கடிதம்.. நாயுடு யோசனையை நிராகரித்த மமதா ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கடிதம்.. நாயுடு யோசனையை நிராகரித்த மமதா

தயாராகும் பாஜக

தயாராகும் பாஜக

உள்ளுக்குள் ஒரு பக்கம் லேசான உதறல் இருந்தாலும் கூட எப்படியும் நமது ஆட்சிதான் மறுபடியும் வரும் என்ற நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் பலமாக காணப்படுகிறது. இதனால் கொண்டாட்டங்களுக்கும் ஒரு பக்கம் தயாராகி வருகின்றனராம் பாஜகவினர்.

ஸ்வீட் ஆர்டர்

ஸ்வீட் ஆர்டர்

மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் கடை படு குஷாலாக மே 23ம் தேதியை நோக்கி தயாராகி வருகிறது. காரணம் இல்லாமலா. அந்தக் கடைக்கு திடீரென வந்து குவிந்த ஆர்டரால் கடைக்காரர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.

2000 கிலோ ஸ்வீட்

2000 கிலோ ஸ்வீட்

பொரிவலி பகுதியில் உள்ளஅந்த ஸ்வீட் கடைக்கு 2000 கிலோ இனிப்பு தயாரித்து வழங்குமாறு பாஜகவின் மும்பை வடக்கு தொகுதி எம்பி வேட்பாளர் கோபால் ஷெட்டி ஆர்டர் கொடுத்துள்ளாராம். எல்லாம் லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளாம்.

மோடி முகமூடியுடன்

பெரிய ஆர்டர் பல்க்காக வந்து குவிந்து விட்டதால் கடைக்காரர்கள் படு வேகமாக தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எப்படி தெரியுமா.. மோடி முகமூடியைப் போட்டுக் கொண்டு லட்டு தயாரித்து வருகின்றனர். ஊழியர்கள் மிகவும் ஹேப்பியாக உள்ளதால் மோடி முகமூடிக்கு மாறி விட்டதாக கடைக்காரர் கூறுகிறார்.

நடத்துங்க நடத்துங்க ஜி.. நல்லா நடத்துங்க ஜி!

English summary
Mumbai Sweet shop workers are preparing sweets in Borivali with Modi masks, ahead of #LokSabhaElections2019 results on 23rd May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X