மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Recommended Video

    India-China Border பிரச்சினை ஒரு பக்கம்..Taj Hotel-க்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

    2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களின் போது தாஜ் ஹோட்டலும் இலக்கானது. மும்பை தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

    Mumbai Taj Hotel Receives Bomb Threat Call from Pakistan

    2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளே இந்த வெறியாட்ட தாக்குதலை நடத்தினர். உலகையே இந்த மும்பை தாக்குதல் சம்பவம் நிலைகுலையவும் வைத்தது.

    இந்நிலையில் மும்பை தாஜ் ஹோட்டலுக்கு இன்று அதிகாலை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தாஜ் ஹோட்டலை தாங்கள் தகர்க்கப் போவதாக பாகிஸ்தானில் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தாஜ் ஹோட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

    English summary
    A Bomb threat call from Pakistan was made at Taj Hotel in Mumbai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X