மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனுக்கு எதிரான பிற மாநில தொழிலாளர் போராட்டம்- மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா தொற்று நோயை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பாக பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

    லாக்டவுனை மே 3-ந் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் மும்பை பாந்தரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்தினர்.

    Mumbai TV reporter arrested for migrant workers gathering

    இதனால் லாக்டவுன் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தனிநபர் இடைவெளி என்பது தகர்ந்தது. இதேபோல் குஜராத்தின் சூரத்திலும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை திருப்பி அனுப்பக் கோரி போராட்டம் நடத்தினர். மும்பையில் போலீசார் தடியடி நடத்தி பிற மாநில தொழிலாளர்களை கலைந்து போகச் செய்தனர்.

    மேலும் பிற மாநில தொழிலாளர்களின் போராட்டத்துக்கு காரணமாக இருந்தார் என மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார். லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் செய்தியை ஒளிபரப்பினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    ஆனால் ராகுல் குல்கர்னி பணிபுரியும் நிறுவனமோ, ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன; பின்னர் மே 3-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது என்கிற செய்தியையும் ஒளிபரப்பினோம் என விளக்கம் அளித்திருக்கிறது.

    English summary
    Mumbai TV Reporter Rahul Kulkarni was arrested for Bandra migrant workers gathering.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X