பட்டப்பகலில் பயங்கரம்.. காரில் சென்ற இஸ்லாமிய மதகுரு துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. நாசிக்கில் பதற்றம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பட்டப்பகலில் காரில் சென்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு குவாஜா சையத் சிஷ்டி என்ற சுபிபா துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். பதற்றம் நிலவும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் குவாஜா சையத் சிஷ்டி (வயது 35). இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே வசித்து வந்தார்.
இவர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இஸ்லாமிய கருத்துகளை எடுத்து உரைத்துள்ளார்.
6 மாநிலம்! துப்பாக்கிச்சூடு முதல் துணை முதல்வர் வீட்டை நொறுக்கியது வரை! அக்னிபாத்தால் நடந்தது என்ன?

காரில் சென்றவர் சுட்டுக்கொலை
இவர் ‛சுபிபாபா' என அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று குவாஜா சையத் சிஷ்டி நாசிக் அருகே காில் சென்று கொண்டிருந்தார். யோலா டவுனில் உள்ள எம்ஐடிசி பகுதியில் அவர் சென்றார். அப்போது 4 மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் நெற்றியில் குண்டு பாய்ந்ததால் குவாஜா சையத் சிஷ்டி இறந்தார்.

காரை எடுத்து சென்ற மர்மநபர்கள்
இதையடுத்து கொலையாளிகள் அவரது காரை எடுத்து கொண்டு சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்க துவங்கினர். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

பல்வேறு கோணங்களில் விசாரணை
இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குவாஜா சையத் சிஷ்டி சர்ச்சைக்குரிய விஷயங்களில் எதுவும் சிக்கவில்லை. இதனால் மதம்சார்ந்து கொலை நடக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர். அதேநேரத்தில் இந்த கோணத்தையும் விசாரணை வளையத்தில் இருந்து போலீசார் புறம்தள்ளவில்லை.

நிலத்தகராறு காரணமா?
ஆயினும் நிலத்தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர். அதாவது ஆப்கானிஸ்தான் குடியுரிமையை பெற்ற குவாஜா சையத் சிஷ்டி நாசிக் பகுதியில் வசிப்போரின் உதவியுடன் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பதற்றம்-போலீஸ் குவிப்பு
மேலும் பதற்றம் நிலவுவதால் நாசிக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது டிரைவரிடம் விசாரணையை துவக்கி உள்ளன