ஆர்யன் கான் நிரபராதி.. சொகுசு கப்பலில் போதை பார்ட்டி வழக்கில் என்சிபி அறிக்கை- இதுவரை நடந்தது என்ன?
மும்பை : சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவர் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மும்பை - கோவா சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையில் ஆர்யன் கான் குற்றமற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதை பார்ட்டி
கடந்த 2021 அக்டோபர் 2ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது சிலர் கொக்கைன், உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஆர்யன் கான்
இதையடுத்து, அந்த கப்பலில் போதைப் பொருட்களை அதிரடியாக கைப்பற்றினர். சொகுசு கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்ய்யப்பட்ட வழக்கில், இந்த கப்பலில் இருந்த நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் பின்னர் நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சர்ச்சைகள்
இந்த வழக்கில் ஆர்யன் கான், ஷாருக் கானை பழிவாங்கும் விதமாக வேண்டுமென்றே திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அலையடித்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மரணமடைந்தார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிகள் டெல்லியிருந்து வந்து பிரபாகரிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டுச் சென்ற சில நாட்களில் அவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

குற்றப்பத்திரிக்கை
இந்த வழக்கு தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கைது செய்யப்பட்ட 20 பேரில் ஒருவரான 23 வயதான ஆர்யன் கான் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. மேலும் 5 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்யன் கான் நிரபராதி
ஆர்யன் கான் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தங்கள் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications