மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் வீட்டிற்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சென்றதால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் வீட்டிற்கு போதை பொருள் தடுப்பு பிரிவினர் சென்று விசாரணை நடத்தினார்கள்.

Recommended Video

    #BREAKING ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை!

    மும்பையில் கடந்த 3ஆம் தேதி கோவாவுக்கு சென்று கொண்டிருந்த ஒரு சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதை பொருள் பார்ட்டி நடப்பதாக என்சிபி (போதை பொருள் தடுப்பு பிரிவு) அதிகாரிகளுக்கு சம்பவ தினத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே ரகசிய தகவல் கிடைத்தது.

    ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. தலைவலியை ஏற்படுத்திய வாட்ஸ்அப் சாட்கள்.. ஷாருக் அடுத்த மூவ் என்னஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு.. தலைவலியை ஏற்படுத்திய வாட்ஸ்அப் சாட்கள்.. ஷாருக் அடுத்த மூவ் என்ன

    இதையடுத்து அந்த கப்பலுக்கு பயணியர் போல் டிக்கெட் எடுத்த அதிகாரிகள் அதில் பயணம் செய்தனர். அப்போது கப்பல் நடுக்கடலுக்குள் செல்லும் போது அங்கு போதை பொருள் விருந்து தொடங்கியது.

    சுற்றி வளைத்த போலீஸ்

    சுற்றி வளைத்த போலீஸ்

    இதையடுத்து என்சிபி அதிகாரிகள் சுற்றி வளைத்து போதை பொருள் வைத்திருந்தவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யான் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆர்யான் கான் அவ்வப்போது போதை பொருளை வாங்கியது அவரது செல்போனில் உள்ள விவரங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்தது.

    மும்பை ஆர்தர் ரோடு

    மும்பை ஆர்தர் ரோடு

    இந்த நிலையில் ஆர்யான் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆர்யானுக்கு கானுக்கு ஜாமீன் பெற மூத்த வழக்கறிஞரை அமீர்கான் உதவியுடன் ஷாரூக்கான் அணுகினார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்யான் கானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

    சிறையில் அடைக்க உத்தரவு

    சிறையில் அடைக்க உத்தரவு

    அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக ஆர்யான் கான் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஷாரூக்கான் முடிவு செய்துள்ளார்.

    மகனை சந்தித்த ஷாரூக் கான்

    மகனை சந்தித்த ஷாரூக் கான்

    இந்த நிலையில் இன்றைய தினம் ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள மகன் ஆர்யான் கானை சந்தித்து பேசினார். இதையடுத்து மும்பையில் உள்ள ஷாரூக்கானின் அதிகாரப்பூர்வ வீட்டிற்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    ஷாரூக்கிற்கு பின்னடைவு

    ஷாரூக்கிற்கு பின்னடைவு

    மேலும் போதை பொருள் விவகாரம் குறித்தும் ஆர்யான் கான் குறித்தும் ஷாரூக் கானிடம் விசாரணை நடத்தினார்கள். இதனால் மும்பை மன்னாட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் மும்பையிலுள்ள நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்படுகிறது. அவர் இன்று பிற்பகலுக்கு மேல் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு ஆஜராக சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது. மகனுக்கு இரு மறை ஜாமீன் மறுக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு செய்த நிலையில் இந்த விசாரணையால் ஷாரூக்கானுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    குற்றவாளி என்பதல்ல

    குற்றவாளி என்பதல்ல

    இதுகுறித்து ஷாரூக் கான் வீட்டுக்கு வந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஒருவர் கூறுகையில் ஷாரூக் கானிடம் விசாரணை நடத்தப்படுகிறது. ஒருவரது வீட்டிற்கோ ஒருவர் இருக்கும் இடத்திற்கோ போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு சென்றால் அதற்காக அந்த நபர் குற்றவாளி என்பது அர்த்தம் இல்லை. விசாரணையில் நிறைய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றார்.

    English summary
    Narcotics Control Bureau arrives at Actor Shah Rukh Khan residence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X