மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான சந்தேகம் களையப்படாவிட்டால் சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுக்கும் அபாயம் ஏற்படுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தன. மகாராஷ்ட்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இங்கு இரண்டு கட்சிகளும் சேர்ந்த 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றது.

NCP chief Sharad Pawar warns, people might take law into their hands over vote machine Doubts

இதனால் அதிர்ச்சியில் இருக்கும் சரத்பவார், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 20வது ஆண்டு விழாவில் அவர் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பல நிபுணர்களிடம் வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டேன்.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜெகன் எடுத்த ஆச்சர்ய முடிவுகள்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.வாக்குப்பதிவுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மக்கள் மனதில் சந்தேகம் இருக்கக்கூடாது. தாங்கள் போட்ட ஓட்டு மற்றவருக்கு சென்றுவிட்டது என மக்கள் நினைக்க இடம் தரக்கூடாது.

இப்போது மக்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தேசிய உணர்வை பயன்படுத்தி ஆட்சியை பிடித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேரும் என்பதில் உண்மையில்லை. எங்கள் கட்சி தனித்து செயல்படும்" இ்வவாறு கூறினார்.

English summary
Nationalist Congress Party chief Sharad Pawar warned that people might take law into their hands if they realise that their votes were not going to the candidate of their choice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X