மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங், காங். மும்முரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி வரை இழுபறி.. மகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கும் ?

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால் சமமான அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகியவற்றால் இரு கட்சிகளிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    NCP, Cong gear up to form Maharashtra govt with Shiv Sena

    இதனையடுத்து மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் நேற்று ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முடிந்தால் பாஜக ஆட்சி அமைக்கட்டுமே என சவால்விட்டார்.

    இந்நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைவர்கள் பாலாசாகேப் தொரட், அசோக் சவாண், சுஷில்குமார் ஷிண்டே, பிரித்விராஜ் சவாண் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினர்.

    சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முதலில் காங்கிரஸ் தயக்கம் காட்டியது. ஆனால் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க விரும்புவதால் அக்கட்சி மேலிடம் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்புஅயோத்தி தீர்ப்பு.. நேபாள எல்லைக்கு சீல்.. உச்சகட்ட பாதுகாப்பு

    தங்களது 56 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்கின்றன மும்பை தகவல்கள். மேலும் சிறிய கட்சிகளின் 20 எம்.எல்.ஏக்களும் சிவசேனாவுக்கு ஆதரவு தர முன்வந்திருக்கின்றன.

    ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் மற்றும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கவும் முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    English summary
    According to the sources, NCP and Congress parties are gearing up to form the Maharashtra Govt with Shiv Sena.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X