மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி? சபாநாயகர் பதவியை நாடும் காங்?.. இதுதான் டீல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான் !

    மும்பை: மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இதில் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும்பட்சத்தில் முதல்வர் பதவியை பகிர்வது குறித்து என்சிபி கோரும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    மகாராஷ்டிரத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார்.

    ஆனால் பாஜகவோ முடியாது என கூறிவிட்டது. இதையடுத்து சிவசேனாவை அழைத்தார். அக்கட்சியோ ஆதரவு கடிதம் கொடுக்க இரு நாட்கள் கால அவகாசம் கேட்டு அதற்கு ஆளுநர் மறுத்துவிட்டார்.

    நல்ல வாய்ப்பை விட வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.. எச்சரித்த மூத்த தலைவர்கள்!நல்ல வாய்ப்பை விட வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.. எச்சரித்த மூத்த தலைவர்கள்!

    குடியரசு தலைவர் ஆட்சி

    குடியரசு தலைவர் ஆட்சி

    பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்தது. அக்கட்சியும் 2 நாட்கள் காலஅவகாசம் கோரிய நிலையில் அங்கு நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சரத்பவார்

    சரத்பவார்

    இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல் நேற்று மாலை மும்பை வந்து என்சிபி தலைவர் சரத்பவாருடன் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிவசேனா

    சிவசேனா

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் கட்சிகளுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சிவசேனாவுடன் பேச்சு நடத்துவதற்கு முன்னர் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தி மற்ற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    கொள்கை ரீதியாக எங்களுக்கு ஒப்பந்தம் முடிவுக்கு வர வேண்டும் என்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இத்தனை தாமதம் ஏன் என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், 3 கட்சிகளுக்குள் அமைச்சர் பதவியை சமமாக பிரித்து கொள்வது பேசப்பட்டது.

    இரண்டரை ஆண்டுகள்

    இரண்டரை ஆண்டுகள்

    மேலும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியை கோரவுள்ளது. அதுபோல் என்சிபியோ முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாஜகவை சிவசேனா கேட்டது போல் கேட்கும் என கூறினர்.

    English summary
    Nationalist Congress party may demand CM post to be shared equally and Congress may asks Speaker's chair.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X