• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மும்பை பெண்.. தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கைரானி சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை டெம்போவில் கடத்திச்சென்றார்.

பின்னர் டெம்போவை நிறுத்திய அந்த கொடூரன் அந்த பெண்ணை மிக கொடூரமாக கற்பழித்துள்ளான். அத்துடன் நின்று விடாமல், காமவெறி அடங்காத அந்த சைக்கோ காமுகன் பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து சிதைத்து விட்டு, கொடூரமாக தாக்கி தப்பி சென்று விட்டான்.

விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி - தங்க கவசத்தில் ஜொலித்த கற்பக விநாயகர் விநாயகர் சதுர்த்தி விழா: பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி - தங்க கவசத்தில் ஜொலித்த கற்பக விநாயகர்

பெண் பரிதாப மரணம்

பெண் பரிதாப மரணம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மும்பை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சைக்கோ கைது

சைக்கோ கைது

இந்த மிக கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட மோகன் சவுகான் (45) என்ற சைக்கோ காமுகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவன் மீது பாலியல் பலாத்காரம், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்தார். ''இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மனிதநேயத்தை அவமானப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். விரைவு நீதிமன்றம் விசாரணையை கையாளும்'' என்று அவர் கூறினார்.

 தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

இது மிகவும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடுமை என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வேண்டும், அதிவேகத்தில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க என்று போலீசாருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

அரசு நாடுகளை போல் தண்டனை

அரசு நாடுகளை போல் தண்டனை

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு இளம்பெண் நிர்பயா, கொடூர கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் நமது மனதில் ஒரு சோக வடுவாக இருக்கிறது. தற்போது நிர்பயா பெயரில் பெண்களுக்கான பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும், பெண்களை சிதைக்கும் இதுபோன்ற சைக்கோக்கள் திருந்துவதாக தெரியவில்லை. அரசு நாடுகளை போல் உடனுக்குடன் கொடூர மரணத்தை மோகன் சவுகான் போன்ற காமுகனுக்கு கொடுத்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை வரும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

English summary
The National Commission for Women (NCW) is investigating the case of a teenager who was raped, mutilated and killed in Mumbai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X