மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் இந்த முறை மோடி அலை வீசுமா? எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit Poll: Maharashtra: மகாராஷ்டிராவில் பாஜகவின் நிலை என்ன?.. கருத்து கணிப்பு என்ன சொல்கிறது?-வீடியோ

    மும்பை: மகாராஷ்டிராவில் இம்முறை பாஜக கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கை குறையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. உத்தரப்பிரேசத்துக்கு அடுத்தபடியாக அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. இங்குள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    நாடு முழுவதும் நேற்று மாலையுடன் தேர்தல் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை டிவி சேனல்கள் வெளியிட்டன. அதன்படி பாஜகவுக்கே மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்! சட்டசபை தேர்தலில் 'கை' கொடுத்த ராஜஸ்தான், ம.பியில் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்தானாம்!

    பாஜகவுக்கு எப்படி?

    பாஜகவுக்கு எப்படி?

    அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்காது, பின்னடைவே ஏற்படும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

    2014ல் மோடி அலை

    2014ல் மோடி அலை

    கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 இடங்களில் சிவ சேனா மற்றும் எஸ்எஸ்எஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது பாஜக. இதில் பாஜக கூட்டணி 42 இடங்களை அள்ளியது. பாஜக மட்டும் 23 தொகுதிகளையும், சிவ சேனா 18 தொகுதிகளையும் எஸ்எஸ்எஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றின. அந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்தது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    பாஜக கூட்டணிக்கு 34

    பாஜக கூட்டணிக்கு 34

    இந்நிலையில் தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி 2014ஆம் ஆண்டு போல் மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி 9 - சி வோட்டர் கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக 19 இடங்களையும் சிவசேனா 15 இடங்களையும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சக்கல் சாம் - 29 இடங்கள்

    சக்கல் சாம் - 29 இடங்கள்

    சக்கல் - சாம் கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக கூட்டணியும் 29 இடங்களை வெல்லும் கூறப்பட்டுள்ளது. இதில் பாஜக 19 இடங்களையும் சிவ சேனா 10 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    34 இடங்கள்

    34 இடங்கள்

    நியூஸ் எக்ஸ் - நெட்டா கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 28 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி - ஏசி கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்களும் பாஜக கூட்டணிக்கு 34 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    38 - 42 வரை கிடைக்கும்

    38 - 42 வரை கிடைக்கும்

    இந்தியா டுடே - ஆக்ஸிஸ் 2014ஆம் ஆண்டு பெற்ற இடங்களையே இந்த முறையும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும் என கணித்துள்ளது. அதன்படி காங்கிரஸ் 6 - 10 இடங்களையும் பாஜக கூட்டணி 38 - 42 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரிபப்ளிக் ஜான்கீ பாத்

    ரிபப்ளிக் ஜான்கீ பாத்

    நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் கூட்டணிக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ரிபப்ளிக் ஜான்கீ பாத் பாஜக அணிக்கு 34 முதல் 39 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 8 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ்நவ் விஎம்ஆர் கணிப்பின்படி பாஜக கூட்டணி 38 இடங்களை வெல்லும் காங்கிரஸ் 10 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Most of the exit polls predicted that the National Democratic Alliance would lose seats in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X