மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Yuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Yuvraj Singh retires | சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ்

    மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து, ஓய்வு பெறுவதாக, யுவராஜ் சிங் இன்று அறிவித்தார். இந்தியா கண்ட மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    யுவராஜ்சிங் பற்றி பல்வேறு அனுபவங்களை ட்விட்டர், பேஸ்புக்கில் நெட்டிசன்கள் ஷேர் செய்து நெகிழ்ந்து வருகிறார்கள். 90ஸ் கிட்ஸ்சின் ஆதர்ஷ நாயகனாக இருந்தவர் யுவராஜ்சிங் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    இப்படியாக ஒரு நெட்டிசன், யுவராஜ் சிங்கின் பல்வேறு திறமைகள் தொடர்பாக சிலாகித்த ஒரு ட்விட்டர் பதிவு உங்கள் பார்வைக்கு:

    உலக கோப்பை

    2003 உலக கோப்பையில், இந்தியா பைனல் வரை சென்றது. யுவராஜ், கைஃப் அணிக்கு வந்த புதிது. அக்தர், வாசிம் அக்ரம், வக்கார் பந்துகளை நீங்கள் சந்தித்ததே இல்லையே, அவர்களை சமாளித்துவிடுவீர்களா என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, "அவர்களும்தான் எங்களை சந்தித்தது இல்லை" என்று தில்லாக பதில் சொன்னவர் யுவராஜ்சிங்.

    இந்தியா வெற்றி

    இந்தியா வெற்றி

    சொன்னதை போலவே, சாதித்தார் யுவராஜ் சிங். சச்சின் அவுட்டானதும் களம் வந்தார். முதல் பந்தே அக்தரிடமிருந்து 155 கிமீ வேக யார்க்கர். அந்த பந்தை லெக் திசையில் சூப்பராக பவுண்டரியாக மாற்றினார் யுவராஜ். அதிரடி தொடர்ந்தது. ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது, வெற்றி பெற்றது இந்தியா.

    சுழற்பந்து வீச்சாளர்

    சுழற்பந்து வீச்சாளர்

    அநாயாசமாக யுவராஜ்சிங், லெக் சைடில் விளாசும் சிக்சர் பலருக்கும் பிடிக்கும். அந்த பந்து வீச்சையும் மறக்க முடியாது. பந்தை லூஃப் செய்து தூக்கி வீசி சுழல வைப்பார். ஃபுல்டாஸ் அல்லது ஓவர் பிட்ச் என நினைத்து பேட்ஸ்மேன்கள் அதை, அடிக்க நினைத்து ஏமாறும் காட்சி அருமையாக இருக்கும்.

    அணியின் முன்னேற்றம்

    அணியின் முன்னேற்றம்

    யுவராஜ்சிங் பேட்டிங்கைவிடவும், அவரது ஃபீல்டிங்தான், வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. இந்திய அணியின் ஃபீல்டிங் திறமையை யுவராஜ்சிங் வருகைக்கு முன்-பின் என பிரிக்கலாம். அத்தனை காலமாக பந்தை குனித்து எடுக்கவே கஷ்டப்பட்ட அணியாக இருந்த இந்தியாவை பறந்து பிடிக்க வைத்தவர் யுவராஜ்சிங்.

    இந்தியாவின் எழுச்சி

    இந்தியாவின் எழுச்சி

    ஒரு காலத்தில் இலங்கை கூட மிகச்சிறந்த ஃபீல்டிங் அணி. உலகிலேயே மட்டமான ஃபீல்டிங் அணி, இந்தியாவும், பாகிஸ்தானும்தான். ராபின் சிங் மட்டுமே அப்போது ஒரளவுக்கு சிறந்த ஃபீல்டர். யுவராஜ்சிங், கைஃப் வருகைக்கு பிறகு, ஃபீல்டிங் பேஷனாக இளைஞர்களிடம் பரவியது. இன்று டாப் ஃபீல்டிங்அணி இந்தியாதான். இவ்வாறு யுவராஜ் சிங்கின் வருகையையும், எழுச்சியையும், சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

    English summary
    Netizens praises Yuvraj Singh as he announced his cricket retirement on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X