மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி

Google Oneindia Tamil News

மும்பை: மாலேகான் குண்டுவேடிப்பு வழக்கில் தாம் நீதிமன்றத்தில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரிய பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்கூரின் மனுவ மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மகாராஷ்டிராவின் மாலேகானில் 2008-ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த படுபயங்கரவாத செயலை இந்துத்துவா தீவிரவாதிகள் செய்தது உறுதி செய்யப்பட்டது.

NIA Court rejects Pragyas plea

இதையடுத்து சாத்வி பிரக்யாசிங் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியா ஏ.என்.ஐ.-ன் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு

இதனிடையே இவ்வழக்கில் ஜாமீனில் வெளியான பிரக்யாசிங், போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் நீதிமன்றத்தில் வாரம் ஒருமுறை பிரக்யாசிங் ஆஜராக கடந்த ஜூன் 3-ந் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார் பிரக்யாசிங்.

அப்போது, மாலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது தெரியுமா? என நீதிபதி கேட்க, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதே தெரியாது என பதிலளித்தார் பிரக்யாசிங். மேலும் தாம் எம்.பி. என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மனுவைத் தாக்கல் செய்திருந்தார் பிரக்யாசிங்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி இன்று பிரக்யாசிங்கின் வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு தருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

English summary
Special NIA court in Mumbai has rejected Pragya Thakur's application for permanent exemption from attending the court once a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X