மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறிய நிசர்கா.. எப்படி? புயல் குறித்த பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

மும்பை: நிசர்கா புயலாக மாறிய ஒரு மணி நேரத்திலேயே தீவிர புயலாக மாறியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.

Recommended Video

    Nisarga Storm | நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?

    தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது இதற்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.

    இது இன்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் மகாராஷ்டிரா- குஜராத் மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும் அந்த மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்?தீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்?

    மழை

    மழை

    இந்த நிலையில் இந்த புயலால் நேற்று கோவாவில் 74 மி.மீ. மழை பெய்துள்ளது. ரத்னகிரியில் 20 மி.மீ. மழையும் ஹர்னாயில் 13 மி.மீ. மழையும், கோலபாவில் 37 மி.மீ மழையும் பதிவானது. நிசர்காவின் கண் தற்போது ரேடாரில் தெரிகிறது. மகாராஷ்டிரா கடலோரத்தை சுற்றி மேகக் கூட்டங்கள் உள்ளன. அப்பகுதியில் மழை பொழிவு கணிசமாக உயர்கிறது.

    சாதகமான சூழல்

    சாதகமான சூழல்

    இந்த புயலின் கண் விட்டம் 65 கி.மீ. ஆக இருந்தது ரேடார் மூலம் தெரியவந்தது. ஆனால் அந்த விட்டம் தற்போது ஒரு மணி நேரத்தில் குறைந்துள்ளது. இதனால் புயல் தீவிரமானதை காட்டுகிறது. இதனால் காற்றின் வேகமும் மணிக்கு 85 முதல் 95 கி.மீ. வேகத்திலிருந்து 90 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. இதன் மூலம் புயல் தீவிரமானதற்கான சாதகமான சூழல்கள் உள்ளதை அறியலாம்.

    தீவிர புயல்

    கடல் பரப்பில் உள்ள அதிக வெப்பத்தாலும் செங்குத்தான காற்றாலும் புயல் தீவிர புயலாக உருவாக உதவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிசர்காவை எதிர்கொள்ள இந்திய விமான படையின் விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. அவை சூரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவிலிருந்தும் 5 தேசிய பேரிடர் மீட்பு துறையினர் மும்பைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    காற்று

    காற்று

    மகாராஷ்டிராவின் கடலோரத்தில் ராய்காட் மாவட்டத்தில் அலிபவுக்கில் இன்று மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவை புயல் சுழற்றி அடிக்கும் என்பதால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் வெர்சோவா கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளது.

    English summary
    Nisarga strom has intensified in 1 hour. IMD explains how is it possible?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X