மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மராத்தியர் ஒருவர் பிரதமராவார்... உத்தவ் தாக்கரே ஆரூடம் பலிக்கிறது?

Google Oneindia Tamil News

மும்பை: மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராவார் என சில மாதங்களுக்கு முன்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தது நிதின் கட்காரிக்கான லாபியின் தொடக்கம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

2014 லோக்சபா தேர்தலில் பாஜக 160 இடங்கள் வென்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதின் கட்காரியை பிரதமராக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் திட்டமாக இருந்தது. ஆனால் 282 தொகுதிகளில் வென்று மோடி பிரதமரானார்.

Nitin Gadkari next prime minister?

மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற நிதின் கட்காரி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் சுமூக உறவில் இருந்து வருகிறார். இதனால்தான் இம்முறையும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நிதின்கட்காரியை பிரதமராக முன்னிறுத்தி மாநில கட்சிகளின் ஆதரவை பெறும் வியூகம் அரங்கேற்றப்படுகிறது.

தேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல் தேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இதனிடையே நிதின் கட்காரிக்கு ஆதரவாக 'மராத்தியர்' லாபி ஒன்றும் படுதீவிரமாக செயல்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ்தாக்கரே, மராத்தியர் ஒருவர் நாட்டின் பிரதமராவார் என கூறியிருந்தார். அவரிடம், சரத்பவார் அல்லது நிதின் கட்காரி யாரை குறிப்பிடுகிறீர்கள்? என கேட்டபோது அதற்கு உத்தவ்தாக்கரே பதிலளிக்கவில்லை.

நாட்டின் பிரதமராக இதுவரை மராத்தியர் ஒருவர் கூட பதவி வகித்தது இல்லை. மொரார்ஜி தேசாய் கூட குஜராத்தைச் சேர்ந்தவர்தான். அதனால் மகாராஷ்டிராவை சேர்ந்த நிதின் கட்சி பிரதமராவதற்கு சிவசேனா முழு ஆதரவைத் தரும்,

அன்று சிவசேனா தொடங்கி வைத்த லாபி ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே மோடி அரசை விமர்சிக்கும் நிலைக்கும் கொண்டு சென்றது. சிவசேனாவின் சாம்னா ஏடும் நிதின் கட்காரிக்கு ஆதரவை தெரிவித்திருந்தது.

உத்தவ் தாக்கரேயின் ஆரூடமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நீண்டகால கனவும் நிறைவேறிடுமா? என்பது மே 23-ல் தெரிந்துவிடும்.

English summary
Nitin Gadkari who is RSS movement's own son who grew up literally next to the their headquarters in Nagpur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X