மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஜித் பவார் கேம் ஆடினாரா? நீர்ப்பாசன ஊழல் வழக்கு என்ன ஆனது? தேவேந்திர பட்னாவிஸ் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் சமரசம் கிடையாது என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றபோதே, என்.சி.பி சட்டசபை குழு தலைவராக இருந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கினார் தேவேந்திர பட்னாவிஸ்.

    ஆனால், அவர் பின்னால் எந்த ஒரு எம்எல்ஏவும் வராததால், இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார் பட்னாவிஸ். முன்னதாக அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்! மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்!

    உடைக்கவில்லை

    உடைக்கவில்லை

    பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக நிருபர்களிடம் பேசிய, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் என்சிபி தலைவர் என்பதால் அவர் பின்னால் கட்சியே இருக்கும் என நினைத்துதான் கூட்டணி வைத்ததாகவும், கட்சியை உடைக்கும் எண்ணம் இல்லை எனவும் கூறினார்.

    சொந்த காரணம்

    சொந்த காரணம்

    ஆனால் திடீரென சொந்த காரணங்களுக்காக துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அஜித் பவார் கூறிவிட்டார். போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால் நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார் பட்னாவிஸ்.

    கேம் பிளான்

    கேம் பிளான்

    அஜித் பவார், திட்டமிட்டே இவ்வாறு செய்தாரா என்ற கேள்விக்கு, இதில் கேம் பிளான் இருக்குமா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் விசாரணை நடந்துள்ளது. நீதிமன்ற மேற்பார்வையில் வழக்கு நடந்து வருகிறது. எனவே அதில் எந்த சமரசமும் செய்யப்படவே இல்லை. இவ்வாறு பட்னவிஸ் தெரிவித்தார்.

    நீர்பாசன ஊழல்

    நீர்பாசன ஊழல்

    துணை முதல்வரானதுமே, அஜித் பவார் மீதான ஊழல் வழக்கு கைவிடப்படுவதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என உடனடியாக ஊழல் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்திருந்தது. இதனிடையே, அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. இதன் மூலம், அஜித் பவார் நடத்தியது கேம் பிளானா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

    English summary
    When asked about Ajit Pawar alliance, Devendra Fadnavis said, "Only Ajit Pawar can clarify on his actions and if it was a gameplan. We will have to look later if it was a mistake of taking Ajit along" says Devendra Fadnavis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X