மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாரிகளின் தீவிர ஆக்ஷன்.. ஒத்துழைப்பு தந்த தமிழர்கள்.. கொரோனாவுக்கு மீண்டும் டாட்டா காட்டிய தாராவி

Google Oneindia Tamil News

மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை. இதனால் கொரோனா முதல் அலையில் சாதித்து காட்டியதுபோல் இரண்டாவது அலையிலும் சாதித்து காட்டியுள்ளது தாராவி.

கொரோனா இரண்டாவது அலையில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரா. ஒரு கட்டத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக தினமும் 66,000-க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகளை பதிவு செய்த மகாராஷ்டிரா வில் இப்போது 10,000-க்கும் கீழே தொற்று குறைந்து விட்டது.

மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களை விட முதலிலேயே ஊரடங்கை கையில் எடுத்ததாலும், தடுப்பூசியை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்த்ததுமே அங்கு தொற்று குறைய முக்கிய காரணமாகும்.

ஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது? ஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது?

கொரோனா பாதிக்கவில்லை

கொரோனா பாதிக்கவில்லை

இந்த நிலையில் மும்பை நகரில் உள்ள தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகதது மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மேலும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் கொரோனா இரண்டாவது அலை உச்சமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

குறைந்த பாதிப்பு

குறைந்த பாதிப்பு

மக்கள் தொகை நெருக்கம் காரணமாக அங்கு வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவலானதாக இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
ஏப்ரல் 8 முதல் அடுத்த 50 நாட்களில் அதாவது மே மே 26 க்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகின.

13 பேர் சிகிச்சை

13 பேர் சிகிச்சை

கடந்த 24 மணி நேரத்தில் அதுவும் குறைந்து யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. திங்கள் வரை தாராவியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் கோவிட் பராமரிப்பு மையங்களில் மற்றும் ஆறு பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விரைவான நடவடிக்கை

விரைவான நடவடிக்கை

கொரோனா இரண்டாவது அலை வந்தபோதே 'சோட்டா சியோன் மருத்துவமனை' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையம் தாராவியில் தொடங்கப்பட்டது. தாராவி குடிசை பகுதி மக்களிடம் வீடு, வீடாக சென்று விரைவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமையில் வைக்கப்பட்டார்கள். நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஒத்துழைத்த தமிழர்கள்

ஒத்துழைத்த தமிழர்கள்

தாராவியில் முழுக்க முழுக்க வசித்து வரும் தமிழர்கள் மாநகராட்சி மற்றும் மருத்துத் துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிகைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா முதல் அலையிலும் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி தாராவி சாதனை படைத்தது தாராவி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
No covid 19 infection has been reported in the last 24 hours in Dharavi, the Largest slum in Asia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X