• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

No smoking, No Alcohol சரி.. அதென்ன No Kissing Zone!.. ரொம்ப வினோதமான அறிவிப்பா இருக்கே!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் ஒரு குடியிருப்பு பகுதியில் அந்த கட்டடத்திற்கு வெளியில் முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி (No kissing Zone) என எழுதப்பட்டிருந்தது.

பொதுவாக சில இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது என போர்டு வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அது போல் குப்பைகளை கொட்டக் கூடாது என்றும் போர்டு வைப்பார்கள். விளம்பரங்கள் ஒட்டக் கூடாது, துண்டுபிரசுரங்கள் ஒட்டக் கூடாது, கேட்டின் முன்பு வாகனம் நிறுத்த வேண்டாம் என எழுதியிருப்பார்கள்.

ஆனால் போரிவாலியில் உள்ள ஒரு சத்யம் சிவம் சுந்தரம் குடியிருப்பு பகுதியில் அந்த கட்டடத்துக்கு வெளியே உள்ள தெருவில் முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி என எழுதப்பட்டிருந்தது. இது அப்பகுதி வழியாக செல்வோரை ஆச்சரியப்படுத்தியுள்ளனர். பொதுவாக முத்தம் என்ற வார்த்தையை பகிரங்கமாக பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம். குழந்தைகளிடம் "ஒரு முத்தம் கொடு" என வேண்டுமானாலும் கேட்டிருப்போம். ஆனால் இப்படி ஒரு சாலையில் இது போல் எதற்காக எழுதியுள்ளார்கள் என்ற காரணத்தை அறிய பலர் ஆர்வமாக உள்ளார்கள். ஏராளமானோர் புகைப்படங்களையும் எடுத்துச் செல்கிறார்கள்.

சுடுகாட்டில் பரபரப்பு.. சடலங்களுக்கு கல்யாணம்.. ஒரே குழிக்குள் ஜோடியை புதைத்து.. என்னாச்சு..?சுடுகாட்டில் பரபரப்பு.. சடலங்களுக்கு கல்யாணம்.. ஒரே குழிக்குள் ஜோடியை புதைத்து.. என்னாச்சு..?

மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள்

மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள்

மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் மரைன் டிரைவ், வேர்லி சீ உள்ளிட்ட இடங்களில் அமர்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளும் மூடப்பட்டிருப்பதால் ஜோடிகளுக்கு சந்திப்பதற்கான இடம் கிடைப்பதில்லை. முத்தம் தடை செய்யப்பட்ட பகுதி என்ற இடம் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது.

இரு சக்கர வாகனங்களில் அட்டூழியம்

இரு சக்கர வாகனங்களில் அட்டூழியம்

இங்கு காதல் ஜோடிகள் வரத் தொடங்கினர். அவர்கள் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து கொண்டு நட்ட நடு சாலை என்பது குறித்து கவலைப்படாமல் முத்தமிட்டும் ஆபாச சீண்டல்களையும் செய்து வந்தனர். இன்னும் சிலர் கார்களுக்குள் அமர்ந்து கொண்டு இது போன்ற வேலையை செய்து வந்தார்கள். இரண்டாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் தினந்தோறும் ஒரு காதல் ஜோடி அந்த பார்க்கிங் இடத்திற்கு வருவராம்.

காலை, மாலை இரு வேளையும் லூட்டி

காலை, மாலை இரு வேளையும் லூட்டி

காலை மாலை வரும் அந்த ஜோடி அங்கு வாகனத்தில் அமர்ந்து கொண்டு முத்தமிட்டு கொண்டும் ஆபாச சீண்டல்களை செய்துக் கொண்டு அருவருக்கும் செயல்களில் ஈடுபட்டனர். பொதுவெளியில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என சொல்லி பார்த்தும் யாரும் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் இந்த குடியிருப்புவாசிகள் இந்த ஜோடிகள் செய்யும் அட்டூழியங்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸ் விரட்டினால் தொடர்கதையான சம்பவம்

போலீஸ் விரட்டினால் தொடர்கதையான சம்பவம்

போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விரட்டியடிப்பர். ஆனாலும் போலீஸார் சென்றதும் அவர்கள் மீண்டும் வந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். இதனால்தான் முத்தமிடுவது தடை செய்யப்பட்ட பகுதி என்ற ஓர் அறிவிப்பை இந்த குடியிருப்புவாசிகள் வைத்துள்ளார்கள். இந்த குடியிருப்புவாசிகள் இதுகுறித்து கூறுகையில் பொதுவாக ஆண்களும் பெண்களும் பேசி கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரன்முறை இருக்கிறது. அதன்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கும் டீன் ஏஜ் சிறுவர்களுக்கும்

இவர்கள் செய்யும் செயல்களை குழந்தைகளும் டீன் ஏஜ் சிறுவர்கள், சிறுமிகள் பார்த்தால் கலாச்சாரம் சீரழியும். பொதுவாக பால்கனிகளில் மாலை நேரங்களில் உட்கார்ந்து கொண்டு குடும்பத்துடன் டீ குடித்தல், பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோம். அப்படி பேசும் போது குழந்தைகளும் இருப்பார்கள், வயது முதியவர்களும் இருப்பார்கள். அவர்கள் இந்த அசிங்கமான செயல்களை பார்த்தால் எப்படியிருக்கும்.

அபார்ட்மென்ட் காவலாளி

அபார்ட்மென்ட் காவலாளி

இந்த ஜோடிகளிடம் போய் இப்படி செய்ய கூடாது என நாங்களே போய் பேசியும் பார்த்துவிட்டோம். அபார்ட்மென்ட் காவலாளியையும் அனுப்பி பார்த்தோம். ஆனாலும் பலனில்லை. எனவே இது போல் எழுதி வைத்தவுடன் அந்த இடத்திற்கு காதல் ஜோடிகள் வருவது குறைந்து போயுள்ளது. இல்லாவிட்டால் வருவார்கள் பேசுவார்கள் பின்னர் சென்றுவிடுவார்கள். ஆபாச செயல்களை செய்ய மாட்டார்கள் என்றனர்.

காதல் எனறால் காமம் மட்டுமே அல்ல

காதல் எனறால் காமம் மட்டுமே அல்ல

காதல் என்றால் வெறும் காமம் மட்டும் இல்லை. ஆபாசங்களை செய்யாமலும் காதலிக்கலாம். அதுதான் உண்மையான காதல். இது போல் சிலர் நடந்து கொள்வதால் காதலி இல்லாதவர்கள் இந்த செயலை பார்த்துவிட்டு பாலியல் குற்றங்களிலும் மற்ற பெண்ணுடன் தகாத உறவிலும் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இளைய சமுதாயத்தினருக்கு நாம் எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் கெட்டு போக எந்த வகையிலும் நாம் காரணமாக இருந்து விடக் கூடாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

பூங்காக்கள் மூடினால் இப்படி செய்யலாமா?

பூங்காக்கள் மூடினால் இப்படி செய்யலாமா?

கடற்கரைகளையும் பூங்காக்களையும் மூடிவிட்டதால் இது போன்று செய்வதாக காதல் ஜோடிகள் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஏற்க முடியாது!. இவர்கள் சபலத்திற்கு இன்னொருவர் கெட்டு சீரழிய வேண்டுமா என்ன? கடற்கரைகளிலும் பூங்காக்களிலும் கூட குழந்தைகள் பெரியவர்கள் வருகிறார்கள். இந்த பகுதிகளை நடுத்தர குடும்பத்தினரும் ஏழை குடும்பத்தினரும் தங்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறிருக்கையில் அந்த இடங்களிலும் காதல் ஜோடிகள் கண்ணியத்தை காக்க வேண்டும். இதே இந்த ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்தால் இது போன்ற ஆபாசங்களை பார்க்க இவர்கள் அனுமதிப்பார்களா என்பதை யோசிக்க வேண்டும்!

English summary
No Kissing Zone in Mumbai area goes viral in Social Media. The residents near the road says that Love pairs are often coming to that place for doing obsenes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X