மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களை எல்லாம் யாரும் கொல்லவில்லை.. இறந்துவிட்டனர்.. ராகுல் காந்தியின் பரபர டிவிட்!

சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சொராபுதீன் என்கவுண்டர் தீர்ப்பு: ராகுல் காந்தியின் பரபர டிவிட்!

    மும்பை: சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்திருந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

    சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில், இரண்டு நாட்களுக்கு முன் மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    13 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    ராகுல் டிவிட்

    இந்த தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டில், ''யாரும் கொல்லப்படவில்லை.. ஹரேன் பாண்டியா, துளசிராம் பிரஜாபதி, நீதிபதி லோயா, பிரகாஷ் தம்பரி, ஸ்ரீகாந்த் கண்டேல்கர், கவ்ஸர் பி, சொராபுதீன் ஷேக்.. இவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், கொல்லப்படவில்லை'' என்று டிவிட் செய்து இருந்தார்.

    வைரல்

    வைரல்

    இவரின் இந்த டிவிட் பெரிய வைரல் ஆனது. இந்த டிவிட் 13 தடவைக்கும் அதிகமாக ரீ-டிவிட் செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிவிட்டிற்கு எதிராகவும் நிறைய பேர் கருத்து தெரிவித்தனர்.

    யார்

    இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவர் ''யாரும் கொலை செய்யவில்லை, 8000 சீக்கியர்கள், இலங்கையில் 1,40,000 அப்பாவி தமிழர்களை யாரும் கொலை செய்யவில்லை, அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.

    கொலை செய்யவில்லை

    அதேபோல் இவர் ''காஷ்மீர் பண்டீட்களின் நிலை என்ன, போபால் விஷ வாயு வெடிப்பு, 1984 சீக்கிய கலவரம்.. இதெல்லாம் [பெரும் கொலைகள் '' என்று கூறியுள்ளார்.

    English summary
    No One Killed: Rahul Gandhi's tweet on Sohrabuddin Sheikh case becomes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X