மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ்? புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை ஆடையைக் கழற்றி போலீஸ் நடனமாட வைத்த தரப்பட்ட புகார் போலியானது என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். பெண்கள் விடுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அத்துமீறு காவல் ஒருவர் வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

No Truth says Maharashtra minister On Women Stripped, Made To Dance By Cops Charge

மேலும், பெண் ஒருவரின் ஆடையைக் கழற்றி, அந்த காவலர் நடனமாட வைத்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக கடுமையாக விமர்சித்தது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விளக்கமளித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் பேசிய அவர், "பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது.

நீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்நீங்க சொன்னதால தான்.. நான் சொன்னேன்.. அவர் எங்க முதல்வர் வேட்பாளர் இல்லை.. பாஜக அமைச்சர் விளக்கம்

அந்த விடுதியிலிருந்து 17 பெண்கள் உட்பட 41 பேரிடம் இது குறித்த விசாரணை நடத்தினோம். அதில் பெண்ணின் புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. அந்த பெண்கள் விடுதியில் காவலர்களுக்கு அனுமதியில்லை.

கடந்த பிப்ரவி 20ஆம் தேதி இந்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது. நடனத்தின்போது பெண் ஒருவர் தனக்கு அசவுகரியமாக இருந்ததால் தனது நீண்ட ஆடையை அகற்றினார். அப்போது அங்கு எந்த ஒரு ஆண் போலீஸ் அதிகாரியும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், புகார் அளித்த பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்றும் இது குறித்து ஏற்கனவே அவரது கணவரும் குடும்பத்தினரும் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Maharashtra government on Thursday said there was no truth in the allegations that women were stripped and forced to dance by policemen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X