மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியின் தலைமையை சந்தேகிக்க வேண்டாம்.. ஆதரவு கரம் நீட்டும் ராம்தேவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் தலைமைக்கு ஆதரவு கொடுக்கும் பாபா ராம்தேவ் - வீடியோ

    மும்பை: பிரதமர் மோடியின் தலைமையை யாரும் சந்தேகிக்க வேண்டியது இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

    அண்மையில் வெளியான 5 மாநில தேர்தல் தோல்வி பாஜகவை ஆட்டம் காண வைத்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவின் செயல்பாடுகளே தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    nobody can raise doubts about Modis leadership: Ramdev

    விமானத்தில் பறந்து வந்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார் என்றும் அவரின் வாக்குறுதிகள் மக்களிடையே எந்த விதமான நம்பிக்கைகளை ஏற்படுத்தவில்லை என்றும் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து யோகா குரு பாபா ராம்தேவ், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய பொருளாதாரம் குறித்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

    நான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி நான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி

    அப்போது அவரிடம் பிரதமர் மோடியின் தலைமை, கொள்கைகள், செயல்பாடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த யோகா குரு பாபா ராம் தேவ், இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. அதற்கான விலையை பின்னர் கொடுக்க வேண்டியிருக்கும்.

    பிரதமர் மோடியின் தலைமையை யாரும் சந்தேகிக்க வேண்டியது இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காக 100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியவர் மோடி. வாக்கு வங்கி அரசியலை அவர் ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்றார்.

    கறுப்புப்பணத்தை கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஒழிக்கமுடிந்ததா என்று மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் அசராமல் பதிலளித்த ராம்தேவ், அனைத்து பணமும் தற்போது ஒன்றாகி விட்டது என்றார்.

    மேலும் பேசிய அவர், நியாயமான கோரிக்கைகளுடன் தொழில் தொடங்க வரும் நபர்களுக்கு வங்கி உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், விஜய் மல்லையா போன்ற நபர்களுக்காக ஆதரவாக இருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

    English summary
    Yoga guru Ramdev said that no one raise doubts about Prime Minister Narendra Modi's leadership and policies. Ramdev said at the India Economic Conclave which heled in Mumbai. He also added that modi has launched more than 100 huge nation-building projects and he has never engaged in vote-bank politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X