மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமேசான், நெட்பிளிக்ஸ் உட்பட 12 ஓடிடி தளங்களுக்கு ஒரே பாஸ்வேர்ட்.. வந்தாச்சு ஜியோ டிவி பிளஸ்.. செம!

Google Oneindia Tamil News

மும்பை: ஜியோ டிவி பிளஸ் (Jio TV Plus) அறிமுகப்படுத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பை, ரிலையன்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) இன்று இந்த அறிவிப்பு வெளியானது. இது ஆன்லைனில் பொழுது போக்கு அம்சங்களை விரும்புவோருக்கு தேவையான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஓடிடி தளங்களில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் நிலை உருவாகிவிட்ட நிலையில், ஜியோ டிவி பிளஸ் இதில் முக்கிய பங்காற்றப்போவது உறுதி.

சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்புசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு

ஓடிடி, டிவி சேனல்கள்

ஓடிடி, டிவி சேனல்கள்

ஜியோ டிவி பிளஸ் என்பது ஒரு கன்டென்ட் திரட்டி என்று சொல்லலாம். ஓடிடி தளங்கள் மட்டுமின்றி, டிவி சேனல்கள், பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளை அதன் ஜியோ செட்-டாப்-பாக்ஸ் பயனர்களுக்கு மொத்தமாக கொண்டுவருகிறது.

ஒரே ஆப்

ஒரே ஆப்

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி எல்ஐவி போன்ற உலகளாவிய முன்னணி 12 ஓடிடி தளங்களை ஒன்றாக ஒரே ஆப்பில் கொண்டு வருகிறது. மேலும் ரசிகர்கள், நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் எளிதாக தேட முடியும். வாய்ஸ் சர்ச் வசதியும் தரப்பட்டுள்ளது.

ஒரே யூசர் நேம், பாஸ்வேர்ட்

ஒரே யூசர் நேம், பாஸ்வேர்ட்

எனவே, வெவ்வேறு ஓடிடி தளங்களில் தனித்தனியாக உள்நுழைவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் அனைத்திலும் நுழைய முடியும். அதாவது அமேசானுக்கு, நெட்பிளிக்சுக்கு என தனித்தனி யூசர் நேம்-பாஸ்வேர்ட் தேவை கிடையாது. ஒரே யூசர் நேம், பாஸ்வேர்ட் மூலம் ஜியோ டிவி பிளஸ் வாயிலாக நுழையலாம். குரல் தேடல் என்பது, அமேசான் ஃபயர்ஸ்டிக்கின் அலெக்சா போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ கிளாஸ் அறிமுகம்

ஜியோ கிளாஸ் அறிமுகம்

வீடியோ மீட்டிங்குகளை எளிதாக நடத்த வசதியாக ஜியோ ஒரு கண்ணாடியை (JioGlass) அறிமுகம் செய்துள்ளது, இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் இணையதள வசதி மூலமாக நாம் யாரை தொடர்பு கொள்கிறோமோ அவர்கள் 3டி தொழில் நுட்பத்தின் உதவியால், நமது நேரில் நிற்பது போல தெரியும். 75 கிராம் தான் இந்த கண்ணாடியின் எடை .

ஆப் உருவாக்கினால் ஊதியம்

ஆப் உருவாக்கினால் ஊதியம்

மேலும் ஜியோ டெவலப்பர்கள் திட்டத்தின் மூலம், எந்தவொரு ஆப் டெவலப்பரும் தங்கள் ஆப்களை உருவாக்கலாம், தொடங்கலாம் மற்றும் இதற்கு பதில் பணமும் சம்பாதிக்கலாம். ஜியோவுடன் கூட்டாளராக விரும்பும் டெவலப்பர்கள் www.jiodevelopers.com என்ற வெப்சைட் முகவரியை அணுகலாம்.

English summary
At Reliance's Annual General Meet 2020 the company announced partnership with Google. Mukesh Ambani announces that Google will invest Rs 33,737 cr for a 7.7% stake in Jio Platforms. In addition, Jio also revealed that the company is developing Jio TV Plus, Jio Glass, and more. The company also announced details about JioMart and Jio 5G solution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X