மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றம் அல்ல.. மும்பை நீதிபதி மீண்டும் சர்ச்சை தீர்ப்பு

Google Oneindia Tamil News

மும்பை: பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்று அதிர்ச்சிகரமான தீர்பை மீண்டும் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார்.

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் 50 வயது நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25, 000 ரூபாய் அபராதமும் விதித்து மகாராஷ்டிர மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Opening Pants Zip Not Sexual Assault under POCSO Act says Bombay HC Judge Who Ruled on Skin-to-Skin Contact

இந்த தீர்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி புஷ்பா கணேடிவாலா முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. தான் பார்க்கும்போது, தனது மகளின் கைகளை அவர் பிடித்திருந்தார் என்றும், அந்த நபரின் ஜிப் திறந்திருந்ததாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல அச்சிறுமி அளித்த வாக்குமூலத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இது பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவின் கீழ் தான் வரும் என்றும் பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும் அதிர்ச்சி தீர்பை அளித்துள்ளார், அதாவது சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், ஜிப்பை திறப்பது போக்சோ கீழ் வராது என்றும் இது பாலியல் துன்புறுத்தல் கீழ்தான் வரும் என்று கூறியுள்ளார்.

உடல் ரீதியான தொடர்பு இருந்தால் மட்டுமே இது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.பாலியல் தூண்புறுத்தல் வழக்கில் ஒருவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை வழங்க முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன், உடலோடு உடல் தொடுவது மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்ற அதிர்ச்சி தீர்பை வழங்கிய அதே நீதிபதிதான் தற்போது இந்தத் தீர்பையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

English summary
In another shocking ruling, the Nagpur bench of the Bombay High Court has held that “the act of holding a girl's hands and opening the zip of pants will not come under the definition of sexual assault” under the Protection of Children from Sexual Offences (POCSO) Act 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X