மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி!

பாஜக அரசு செய்யும் பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அரண்டு போய் இருக்கிறது என்று என்று பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: பாஜக அரசு செய்யும் பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அரண்டு போய் இருக்கிறது என்று என்று பிரதமர் மோடி மஹாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் பேசி உள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் இந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

மேலும் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பிரதமர் மோடி இன்று இரண்டு இடங்களில் அங்கு பிரச்சாரம் செய்கிறார். இதே நாளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் மஹாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி கூட்டணி

எப்படி கூட்டணி

பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், நாங்கள் கடந்த ஐந்து வருடங்கள் செய்த பணிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அரண்டு போய் இருக்கிறது. பாஜக சிவசேனா கூட்டணி மிகவும் தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. காங்கிரஸ் அமைக்கும் கூட்டணி தேவையில்லாதது. அவர்களின் கூட்டணி மக்களுக்கு பலன் அளிக்காது.

சந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்!சந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்!

பெண்கள் நிலை

பெண்கள் நிலை

மஹாராஷ்டிராவில் பெண்களின் வாழ்க்கையில் நாங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். நாங்கள் செய்யும் பணிகள் எங்களுக்கு பெரிய அளவில் திருப்தி அளிக்கிறது . 10 லட்சம் பெண்கள் கடந்த ஒரு வருடத்தில் எங்களின் திட்டங்களால் பலன் அடைந்துள்ளனர்.

ஆட்சி மோசம்

ஆட்சி மோசம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பொது நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரை தாக்குகிறார். அதை பார்க்கவே பயமாக, அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும். அவர்கள் மக்களை எப்படி நடத்துவார்கள் என்று நீங்களே பாருங்கள்.

என்ன கனவு

என்ன கனவு

மஹாராஷ்டிராவில் மக்களின் கனவை நிறைவேற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மஹாராஷ்டிராவில் 2022க்குள் மொத்தமாக வறுமை ஒழிக்கப்படும். அங்கு உள்ள எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்காக 3.5 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Opposition here is shocked and disturbed by our work says PM Modi in Maharashtra elections campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X