மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. மழை நீரில் மிதக்கும் மும்பை.. பொதுமக்கள் அவதி.. இதுவரை 3,500 பேர் மீட்பு

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் மும்பையில் விடப்பட்டுள்ள நிலையில் மழை நீடித்து வருகிறது

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. தானே பகுதியில் திடீர் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.. இதனால், மின்சார ரயில்கள், பேருந்துகள், டாக்சிகளுக்காக மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.. 3,500 பேர் தற்போது பாதுகாப்பான இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.

மும்பையில் நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதாவது, வரும் வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களமிறங்கினார்கள்..

கோடைக்கு இதமாக சென்னையில் கனமழை.. போண்டா, டீயுடன் கொண்டாடிய மக்கள்! கோடைக்கு இதமாக சென்னையில் கனமழை.. போண்டா, டீயுடன் கொண்டாடிய மக்கள்!

 மஞ்சள் அலர்ட்

மஞ்சள் அலர்ட்


பிறகு, மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் மழை கொட்ட தொடங்கிவிட்டது.. மும்பை பகுதியில் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.. அதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது... பல இடங்களில் ரயில்கள் வர காலதாமதம் ஏற்பட்டது.

 வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

மும்பையில் சயான், பாந்த்ரா, கிங்சர்க்கிள், மாட்டுங்கா, குர்லா போன்ற பகுதியில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது... இதனால் பல வழித்தடங்களில் பஸ்கள் வேறு ரூட்டில் திருப்பி விடப்பட்டது. மழை நீர் முழங்கால் அளவு தேங்கி நிற்கிறது.. பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மும்பை கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன...

ராய்காட்

ராய்காட்

சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. மும்பையில் இடைவிடாது பெய்து வரும் மழை மற்றும் அதன் காரணமாக நீர் தேங்குவதால், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் ஜூன் 8 வரை பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 ஆரஞ்சு அலர்ட்

ஆரஞ்சு அலர்ட்

இந்த பகுதிகளில்தான் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது... இப்போதைக்கு மகாராஷ்டிராவில் தேசிய பேரிடர் மீட்பு படையின் எட்டு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்..

English summary
Orange and Yellow alert in Mumbai: 3500 moved to safety across maharashtra due to heavy rain மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் மும்பையில் விடப்பட்டுள்ள நிலையில் மழை நீடித்து வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X