மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அது தோல்வியில்லை.. தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன சரத் பவார்

Google Oneindia Tamil News

மும்பை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிர மாநிலத்தில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்று விட்டதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது சரத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாராமதி தொகுதி சரத் பவார் குடும்பத்தின் கோட்டை என கருதப்படுகிறது. அங்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, தொடர்ந்து 2-வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Our party is still strong and we are not defeated .. Sarath Pawar

ஆனால் மாவல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பார்த் பவார் தோல்வியுற்றார். சரத் பவாரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் தோற்பது இதுவே முதல் முறையாகும். இதனால் சரத் பவார் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பார்த் பவாரின் தோல்வி குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவரது தந்தையான அஜித் பவார், மாவல் தொகுதியில் போட்டியிட்ட பார்த் பவாருக்காக தாமும், கட்சி தொண்டர்களும் மிக கடுமையாக பாடுபட்டதாக கூறினார். எனினும் இந்த தோல்வி குறித்து பெரிதும் கவலைப்பட மாட்டோம். மக்களின் தீர்ப்பை எங்கள் கட்சி ஏற்று கொள்கிறது. எதிர்காலத்தில் இத்தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார்

முன்னதாக சரத் பவாரை கட்டாயப்படுத்தி தன் தன் மகனுக்கு அஜித் பவார் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

தேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி தேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி

இது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் குன்ற செய்துள்ளது. இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில கருத்துகளை கூறியுள்ளார் சரத் பவார். தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் நாங்கள் தோற்றதாக அர்த்தம் இல்லை என சரத் பவார் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் வலுவாக தான் இருக்கிறது. தொண்டர்கள் சோர்வுற தேவையில்லை. மேலும் இந்த தேர்தலில் ஏன் தோல்வி கிட்டியது என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.

English summary
Even if their party does not win the election, it does not mean that it has failed to do so, says sharad pawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X