மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அது" மட்டுமே தெரியும்.. வேற எதுவுமே தெரியாது.. மொத்தம் 53 கேஸ்.. தில்லாலங்கடி பெண்.. சிக்கினார்!

மும்பையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

மும்பை: "எனக்கு வேற தொழில் தெரியாது" என்று சொல்லும் இந்த மும்பை பெண் மீது மொத்தம் 53 போலீஸ் கேஸ்கள் உள்ளனவாம்... திருடியதை பர்தாவுக்குள் ஒளித்தும், மறைத்தும், திருடியும் வைத்தே வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்!

மும்பையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி, ஒரு ஆசிரியர் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அவருக்கு பக்கத்தில் ஒரு பர்தா அணிந்த பெண் நின்று கொண்டிருந்தார். திடீரென அவரிடம் இருந்த பணம், செல்போனை காணவில்லை.

over 53 cases, mumbai crime queen Yasmin Shaikh arrested

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார்.. போலீசாரம், ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அது பழக்கப்பட்ட முகம் என்பது தெரியவந்தது... பல கொள்ளை வழக்கில் தொடர்புடைய யாஸ்மின் ஷேக்தான் அவர் என்பதையும் செய்தனர்.

எப்படியும் திரும்பவும் சிக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதன்படியே வேறு இடத்தில் ஆட்டைய போட்டுவிட்டு தப்பியோட முயன்றார்.. அப்போது போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர்.. தொடர்ந்து ஷேக்கிடம் விசாரணையும் நடத்தினர்.. மும்பை அன்டோப் ஹில்லில்தான் ஷேக் வசித்து வந்துள்ளார்.

சின்ன வயசிலேயே பார் பெண்ணாக தன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு தடை விதிக்கவும், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. தனக்கு வேறு வேலை எதுவுமே தெரியாது என்பதால், திருட்டு திருட்டு தொழிலில் இறங்கிவிட்டாராம்.. ஷேக்கிற்கு 2 முறை கல்யாணம் ஆகி உள்ளது... 3 குழந்தைகளும் உள்ளனர்... தன்னுடைய 15 வயது மகளை, பஞ்சகனியில் உள்ள பணக்கார ஸ்கூலில் சேர்த்து ஷேக் படிக்க வைத்து வருகிறாராம்.

"அந்த" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்

Recommended Video

    போற, வர்ற பெண்களை கட்டி பிடித்த இளைஞரை கைது செய்த போலீஸ்

    இப்போது ஷேக் வீடு கோவாண்டியில் உள்ளதால், அந்த வீட்டிற்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர்.. அப்போது வீட்டிற்குள் சென்றதும், போலீசாரே அதிர்ந்து விட்டனர்... ஷேக் வீட்டில் சுமார் 5.5 கிலோ தங்கம் வைத்திருந்தார்... மேலும் இதுவரை திருடிய எல்லா பொருட்களை மறைத்து வைத்திருந்தார். அவைகளை சோதனையிட்டபோது, தங்கம், செல்போன்கள், பணம் என ஆங்காங்கே கிடந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.. அவற்றை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார், ஷேக்கை சிறையில் அடைத்தனர்.

    English summary
    mumbai crime queen yasmin Shaikh arrested and inquiry is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X