மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் இந்தியா வீசிய குண்டு.. கர்தார்பூர் குருத்வாராவில் காட்சிக்கு வைத்து பாக். விஷமம்!

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் விருப்பத்திற்குரிய வழிபாட்டு தலமான கர்தார்பூர் குருத்வாராவில், கடந்த 1971 போரின்போது பாகிஸ்தான் மீது இந்தியா வீசியதாக சிறிய ரக குண்டு ஒன்றை பாகிஸ்தான் காட்சிப்படுத்தி தனது சின்னப் புத்தியைக் காட்டியுள்ளது.

இதன்மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்கள் இடையே பகைமை உணர்வை மேலும் தூண்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

குருத்வாராவின் வெளியில் கண்ணாடி பெட்டியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள இந்த சிறிய ரக குண்டின் மீது கண்டா என்ற வழிபாட்டு சின்னத்தையும் வைத்துள்ள பாகிஸ்தான், இதன் அருகில் இதுகுறித்து ஒரு விளக்க போர்டையும் வைத்துள்ளது.

காதலியுடன் ஓடிப் போனவரை பிடித்து வந்து.. கட்டி வைத்து பெல்ட் அடி.. வைரலாகும் வீடியோகாதலியுடன் ஓடிப் போனவரை பிடித்து வந்து.. கட்டி வைத்து பெல்ட் அடி.. வைரலாகும் வீடியோ

கண்ணாடி பேழையில் குண்டு

கண்ணாடி பேழையில் குண்டு

இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து பகைமை உணர்வுடன் இருப்பதை உறுதி செய்துவரும் பாகிஸ்தான் அரசு, இந்த முறை தன்கையில் மத உணர்வையும் எடுத்துக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற கர்தார்பூர் குருத்வாரா வளாகத்தில் இந்தியா கடந்த 1971ம் ஆண்டு நடத்திய போரின்போது வீசிய சிறியரக குண்டை அங்கு பாகிஸ்தான் காட்சிப்படுத்தியுள்ளது.

இறைவனின் கருணையால் தப்பித்தது

இறைவனின் கருணையால் தப்பித்தது

கடந்த 1971ம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய விமானப்படை குருத்வாராவை அழிக்கும் முயற்சியில் குண்டு வீசியதாகவும், ஆனால் இறைவனின் கருணையால், அது அழியாமல் பாதுகாக்கப்பட்டதாகவும் ஒரு விளக்க போர்டையும் பாகிஸ்தான் அரசு வைத்துள்ளது.

எந்தவித சேதமும் இல்லை

எந்தவித சேதமும் இல்லை

குருத்வாராவில் உள்ள ஒரு கிணற்றில் இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அந்த போர்டில் தெரிவித்துள்ளது. இந்த கிணற்றில் இருந்த தண்ணீரை கொண்டு, குருநானக் தன்னுடைய வயல்களுக்கு நீர்பாய்ச்சியதாக கூறப்படுகிறது.

இந்தியா பதிலளிக்கவில்லை

இந்தியா பதிலளிக்கவில்லை

1971ம் ஆண்டில் நடைபெற்ற போரில் இருதரப்பிலும் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், தற்போது இந்த பிரச்சினையை கையில் எடுத்து பிரிவினையை தூண்டும் பாகிஸ்தானின் இந்த செயல்பாட்டிற்கு இந்தியா உடனடியாக எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் இது வேண்டும் என்றே பாகிஸ்தான் செய்யும் விஷம வேலை என்று எதிர்ப்பு கிளம்பி விட்டது.

English summary
Indian bomb from 1971 exhibits in Pakistan Gurudwara site
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X