ஹீரோயின் மாதிரி இருக்கீங்க! சினிமா ஆசை காட்டி சீரழிக்கப்பட்ட 10 சிறுமிகள்! அதுவும் ஒரு வருடமாகவா..?
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் அருகே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை காட்டி பல சிறுமிகளை ஒரு வருடத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.
எவ்வளவோ முயன்றும் பெண்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க முடியாமல் மகாராஷ்டிரா போலீஸார் திணறி வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வராக பிராமணர் வர வேண்டும்! மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பரபர பேச்சு

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
திரைப்படங்களில் நடிக்கத் வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி இரண்டு இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வருடமாக, குற்றம் சாட்டப்பட்டவர், 13 வயதுக்குட்பட்ட பல சிறுமிகளை, வசாய் பகுதியில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமிகளுக்கு மிரட்டல்
மேலும் சில சிறுவர்களுடனும் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகவும், மீரா பயந்தர்-வசாய் விரார் காவல் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி தெரிவித்தார்.. அந்த நபர், சிறுமிகளுடன் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி அவர்களிடம் ரூ.70,000 கேட்டுள்ளார்.

வழக்குப் பதிவு
சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நல்லசோபாரா போலீஸார் திங்கள்கிழமை அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்), 384 (பணம் பறித்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

அரசு மீது குற்றச்சாட்டு
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாகவே மும்பையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.