மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரதட்சணை தரவில்லை என்பதற்காக மருமகள்களை இப்படி செய்யலாமா மாமனார்?

Google Oneindia Tamil News

மும்பை: வரதட்சணைக்காக, மருமகள்களை விற்பனை செய்த மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் மகராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலுள்ள விரார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய் ரவால் (தொழிலதிபர்) மற்றும் அவரது சகதோரர் வருண் ரவால் (சி.ஏ. பட்டதாரி) .

இந்த இரு சகோதரர்களும், ராஜஸ்தானை சேர்ந்த சகோதரிகளை கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தனர்.

[சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநருக்கு கட்டாய விடுப்பு.. இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர் ராவ் நியமனம்]

வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமை

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கழித்து, புது தொழில் செய்ய கடை வாங்க வேண்டும் என்றும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி, மனைவி வீட்டாரிடம் வர தட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர் சகோதரர்கள். வரதட்சணை தர முடியாத சூழ்நிலையில், இருவருமே தங்கள் மனைவிகளை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

5 லட்சம் ரூபாய்

5 லட்சம் ரூபாய்

இதையடுத்து 500000 ரூபாயை எப்படியோ புரட்டி எடுத்து கணவர்களிடம் அப்பெண்கள் கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் ரூ.4,00000 வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், தாங்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வளவு பணத்தை திரட்ட முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

அடி, உதை

அடி, உதை

இருப்பினும் அவர்கள் பேச்சை சகோதரர்கள் கேட்க தயாரில்லை. கொடுமைகள் தொடர்ந்துள்ளன. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அந்த தொல்லை அதிகரித்துள்ளது. கணவர்கள் மட்டுமின்றி, குடும்பத்தாரும் இதில் சேர்ந்து கொண்டனர்.

விற்பனை

விற்பனை

இந்த நிலையில்தான், சகோதரிகள் இருவரையும், அவரது கணவரும், மாமனாரும், பிணையமாக மற்றொரு நபரிடம் விட்டுவிட்டு ரூ.1,50,000 பெற்றுள்ளனர். சகோதரிகளை சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி வைப்பதாக கூறி அவர்களுடன் பணம் கொடுத்த நபரையும் உடன் அனுப்பியுள்ளனர். அப்போதுதான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து காவல்துறையில் அப்பெண்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சய் ரவால், சகதோரர் வருண் ரவால், அவர்களின் தந்தை மோகன்லால், தாய் லீலாவதி, சில உறவினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A shocking incident of two Rajasthani women having been allegedly "sold off to recover dowry" has come to light on Monday in Virar town here, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X