மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை ஹோட்டலில் வேவு பார்த்த போலீஸ்... என்சிபி தலைவர்களிடம் வசமாக சிக்கினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மும்பை ஹோட்டலில் வேவு பார்த்த போலீஸ்...மடக்கிப் பிடித்த என்சிபி தலைவர்கள் !

    மும்பை: மும்பையில் என்சிபி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட சொகுசு ஹோட்டலில் சாதாரண உடையில் வேவு பார்த்த போலீஸ் அதிகாரியை என்சிபி தலைவர்கள் மடக்கிப் பிடித்தது சர்ச்சையானது. இதனையடுத்து எம்.எல்.ஏக்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இரவோடு இரவாக மாற்றியது என்.சிபி.

    மகாராஷ்டிராவில் என்சிபியை உடைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அஜித்பவார் தலைமையில் எம்.எல்.ஏக்களை பிரிக்கும் நடவடிக்கைகள் துவங்கின.

    Policeman in plain clothes caught by NCP leaders inside Hotel

    இதனால் உஷாரான என்சிபி தலைமை, கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மும்பை ரினைசன்ஸ் சொகுசு ஹோட்டலில் தங்க வைத்திருந்தது. அவர்களிடம் என்சிபி தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் ஹோட்டலில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களையும் விட்டு வைக்காமல் பாஜக தரப்பு பேரம் பேசுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் சீருடைய அணியாமல் சாதாரண உடையில் சில போலீஸ் அதிகாரிகள் என்சிபி எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வேவு பார்த்து வந்தனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பவார்... 54 என்சிபி எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவாருக்கே ஆதரவு தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பவார்... 54 என்சிபி எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவாருக்கே ஆதரவு

    இதனை கண்டுபிடித்த என்சிபி தலைவர்கள் அந்த போலீஸ் அதிகாரியை அடையாளம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹோட்டலில் இருந்து போலீசார் வெளியேறினர். இதனையடுத்து நேற்று இரவோடு இரவாக வேறு ஒரு ஹோட்டலுக்கு எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை இந்த ரிசார்ட் அரசியல் தொடரும் என்றே தெரிகிறது.

    English summary
    A policeman in plain clothes was caught by NCP leaders inside the Hotel premises.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X