மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்சி சமுதாயத்துக்கு 60,000 கொரோனா தடுப்பு ஊசி...சைரஸ் ஒப்புதல்!!

Google Oneindia Tamil News

மும்பை: பார்சி சமுதாயத்துக்கு என்று 60,000 தடுப்பு ஊசி மருந்துகளை ஒதுக்குவதற்கு பில்லியனர் சைரஸ் பூனாவாலா ஒப்புக் கொண்டுள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவராகவும், பூனாவாலா குழுமத்தின் தலைவராகவும் சைரஸ் இருக்கிறார்.

பார்சி சமுதாயத்துக்கு எந்தளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஒதுக்கப்படும் என்று தொழிலதிபர் ரோன்னி ஸ்க்ருவாலா ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

Poonawallas accepted to allot 60,000 vials to Parsis only

இதற்கு பதில் அளித்து இருக்கும் சைரஸ் பூனாவாலாவின் மகன் அடர் பூனாவாலா, ''பார்சி சமுதாயத்துக்கு அவர்களது தேவைக்கு மேல் ஒதுக்கப்படும். இந்த உலகில் இருக்கும் அந்த சமுதாயத்துக்கு தடுப்பு மருந்து தயாரிக்க எங்களுக்கு ஒரு நாள் மட்டுமே போதுமானது'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ரோன்னி செய்திருந்த ட்வீட்டில், ''பார்சி இனமே அழிந்து கொண்டு இருக்கிறது என்ற சூழல் உள்ளது. அவர்களை காப்பாற்றுவதற்கு தடுப்பு ஊசியை ஒதுக்கினால் என்னவாகும்'' என்று கேட்டு இருந்தார்.

வாய்ப்பே இல்லை.. நெருங்கும் ஜூலை 31.. தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா.. ஸ்மார்ட் லாக்டவுன்தான் தீர்வுவாய்ப்பே இல்லை.. நெருங்கும் ஜூலை 31.. தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா.. ஸ்மார்ட் லாக்டவுன்தான் தீர்வு

இவரது ட்வீட் வைரலாகி இருந்தது. இந்த நிலையில்தான், சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அடர் பூனாவாலா பதில் அளித்து இருந்தார். இதையடுத்து தின்ஷா மேத்தா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில், ''கொரோனாவுக்கு பார்சி இனத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே பார்சி சமுதாயத்துக்கு 60,000 தடுப்பு மருந்துகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து இருந்த சைரஸ் உறுதி அளித்து இருந்தார்.

English summary
Poonawallas accepted to allot 60,000 vials to Parsis only
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X