• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

உலகளவில் அம்பலமான இந்திய மின்வெட்டு.. சிஎஸ்கே தோல்விக்கு இதுவே காரணம்! அடித்து சொல்லும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மின் தடை ஏற்பட்டதால் டி.ஆர்.எஸ் கேட்க முடியாமல் சென்னை வீரர் டெவோன் கான்வே ஆட்டமிழந்தது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி இந்தியாவின் மின்வெட்டு பிரச்சனை குறித்த விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

  CSK வீரர்கள் பரிதாபமாக Wicket! Mumbai Indians அபாரம் ? | Oneindia Tamil

  2022 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் 10 அணிகளுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 59 வது போட்டியில் புள்ளிப்பட்டியலில் பின் தங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின.

  சென்னை vs மும்பை: செந்தில், கவுண்டமணி காமெடியுடன் ஒப்பிட்டு ஐபிஎல் போட்டியை கலாய்த்த ஐபிஎஸ் அதிகாரி சென்னை vs மும்பை: செந்தில், கவுண்டமணி காமெடியுடன் ஒப்பிட்டு ஐபிஎல் போட்டியை கலாய்த்த ஐபிஎஸ் அதிகாரி

   சென்னை முதலில் பேட்டிங்

  சென்னை முதலில் பேட்டிங்

  இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேனியல் பந்தில் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

  நிலைகுலைந்த சி.எஸ்.கே. தொடக்க வரிசை

  நிலைகுலைந்த சி.எஸ்.கே. தொடக்க வரிசை

  மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே முதல் பந்திலேயே டேனியல் சாம்ஸ் ஓவரில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலியும் ரன் எடுக்காமல் டேனியல் சாம்ஸ் பந்தில் நடையை கட்டினார். ராபின் உத்தப்பாவும் ஜஸ்பிரித் பும்ராவின் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஒரே ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்க ,சென்னை அணியின் ஆரம்ப பேட்டிங் வரிசை நிலைகுலைந்தது.

  97 ரன்களில் ஆல் அவுட்

  97 ரன்களில் ஆல் அவுட்

  அம்பதி ராயுடு 10 ரன்களை எடுத்து மெரெடித் பந்தில் அவுட் ஆனார். கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 10 ரன்கள், டுவேன் பிராவோ 12 ரன்கள், சிமர்ஜீத் சிங் 2 ரன்கள், தீக்‌ஷானா பூஜ்ஜியம், முகேஷ் சவுதாரி 4 என ஆட்டமிழக்க சென்னை அணி 16 ஓவர்கள் 97 ரன்களுக்குள் சுருண்டது.

  மும்பை இந்தியன்ஸ் வெற்றி

  மும்பை இந்தியன்ஸ் வெற்றி

  கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடிய கேப்டன் தோனி 33 பந்துகளில் 36 ரன்களை குவித்தார். அடுத்த களமிறங்கிய மும்பை அணியும் அடுத்தடுத்த ஆட்டமிழக்க, திலக் வர்மாவின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 15 வது ஓவரிலேயே 103 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் கடந்த போட்டி அடைந்த தோல்விக்கு மும்பை அணி பழிதீர்த்துள்ளது.

  நடுவர் முடிவில் சர்ச்சை

  நடுவர் முடிவில் சர்ச்சை

  இதனிடையே சென்னை அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே முதல் பந்திலேயே டேனியல் சாம்ஸ் ஓவரில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தது செல்லாது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். டெவான் கான்வேவுக்கு நடுவர் அவுட் கொடுத்ததில் சந்தேகம் இருந்ததால் அவர் டி.ஆர்.எஸ். மூலம் மூன்றாவது நடுவரிடம் ரிவியூ கேட்க முற்பட்டார்.

   மின் வெட்டால் பாதிப்பு

  மின் வெட்டால் பாதிப்பு

  அந்த சமயத்தில் மைதானத்தில் மின்வெட்டு ஏற்பட்டதால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் செயல்படவில்லை எனக்கூறி நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானது என அறிவிக்கப்பட்டது. இதனால் டெவான் கான்வே வெளியேறினார். மின்வெட்டு பிரச்சனை காரணமாகவே சென்னை அணி தோற்றுவிட்டதாக கூறி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடு முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை அணியில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரரையும் அது விட்டுவைக்கவில்லை என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

  English summary
  Power cut in CSK vs MI Ipl match - Devon conway's LBW is under issue - DRS not working: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மின் தடை ஏற்பட்டதால் டி.ஆர்.எஸ் கேட்க முடியாமல் சென்னை வீரர் டெவோன் கான்வே ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X