மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் ஹாட்டாபிக்கான "இந்த" மீட்டிங்.. ஷாரூக் கான் கேட்டும் நோ சொன்ன பிரசாந்த் கிஷோர்!

Google Oneindia Tamil News

மும்பை: தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர் நேற்று முன் தினம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை சந்தித்துள்ளது. இதுதான் நேற்று முழுவதும் ஹாட் டாபிக்காக இருந்தது.

Recommended Video

    Prashant Kishore-ஐ திடீரென சந்தித்த Shah Rukh Khan.. எதுக்கு தெரியுமா?

    இந்தியாவில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனங்களில் ஐபேக் எனும் இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி நம்பர் ஒன் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர்.

    இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

    இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். ஐநா சபையில் பணியாற்றி விட்டு வந்த இவர் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின்போது கடும் எதிர்ப்பு அலை வீசி வந்த மோடிக்கு வெற்றிக்கனியை பறித்து கொடுத்தவர்.

    பாஜக

    பாஜக

    இதன் பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க உறுதி செய்தது பிரசாந்த் கிஷோரின் வியூகம்தான். பீகாரின் நிதிஷ் குமாருக்கு மெகா கூட்டணி அமைக்க திட்டம் வகுத்து கொடுத்ததும் ஐபேக்தான்.

    சந்திரபாபு

    சந்திரபாபு

    ஆந்திரத்தில் ஸ்டிராங்காக இருந்த சந்திரபாபு நாயுடுவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கியதும் கிஷோரின் நிறுவனம்தான். இப்படியாக தமிழகத்தில் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராகவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தக்க வைக்கவும் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

    வியூகம்

    வியூகம்

    இவர் இத்துடன் தேர்தலுக்கு வியூகம் வகுத்து கொடுப்பதை நிறுத்திக் கொள்வதாக பிரசாந்த் அறிவித்திருந்தார். கடந்த மே 2 ஆம் தேதி அதாவது 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரசாந்த் தனது ட்விட்டரில் தேர்தல் உத்திகள் தொடர்பான வேலை போதும். இத்துடன் நிறுத்தி விலகுகிறேன் என கூறியிருந்தார்.

    விஷயம் என்ன

    விஷயம் என்ன

    இந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக் ஒரு அரசியல்வாதி அல்ல, அப்படியென்றால் இந்த சந்திப்பு என்னவாக இருக்கும்? என யோசிக்கிறீர்களா, விஷயம் இருக்கிறது.

    ஓகே

    ஓகே

    ஷாரூக்கின் எஸ்ஆர்கே தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுக்க விருப்பப்படுவதாகவும் அது குறித்து பேச ஏற்கெனவே முன்னெடுக்க ஏற்கெனவே சந்தித்து ஆலோசித்தனர். ஆனால் பிரசாந்த் கிஷோர் இந்த திட்டத்திற்கு உடன்படவில்லை. அவர் ஓகே சொன்னவுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    English summary
    IPAC Prashant kishore meets Sharukh khan in Mumbai to discuss about Web Series.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X