மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் இன்றும் நாளையும் கனமழை.. வீட்டை விட்டு வெளியேறாதீர்.. வானிலை ஆய்வாளர்கள் வார்னிங்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Tamilnadu Weatherman | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மழை நிலவரம் என்ன? | Oneindia Tamil

    கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து தற்போது தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது முறையாக நல்ல மழை இன்று பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து தனியார் வானிலைஆய்வு மையம் கூறுகையில் மும்பையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் மும்பைவாசிகள் இன்றும் நாளையும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கொட்ட போகும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கொட்ட போகும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்

     வங்கக் கடல்

    வங்கக் கடல்

    இந்த மழை ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் குறையத் தொடங்கும். வங்கக் கடலின் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் இன்றும் நாளையும் நல்ல மழையை கொடுக்கும். வங்கக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

    நல்ல மழை

    நல்ல மழை

    அந்த நேரத்தில் கடல்கள் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மத்திய பிரதேசத்திற்கும் நல்ல மழையை பெற்று கொடுக்கும். அது போல் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைப் பொழிவை தரும்.

    136 பேர் பலி

    136 பேர் பலி

    ராஜஸ்தானில் நல்ல மழை பெய்ததால் அங்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜெய்ப்பூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட சாலையில் கார் ஒன்று சிக்கி தவித்தது. உத்தரப்பிரதேசத்தில் 15 மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அஸ்ஸாமில் இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றால் 136 பேர் பலியாகிவிட்டனர்.

    வெள்ளப்பெருக்கு

    வெள்ளப்பெருக்கு

    சோனிட்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆறு அபாய கட்டத்தை தாண்டிய பெருக்கெடுத்து ஓடுகிறது. அது போல் அதன் துணை ஆறுகளும் அபாய கட்டத்தை தாண்டியே பெருக்கெடுத்து ஓடுகின்றன. மும்பையில் 100 செ.மீ. மழை பொழிவை கொண்டு வரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    Private weather report says that Mumbai will get intensive rainfall. Mumbaikars advised to avoid going out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X