மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை வெள்ளக்காடானபோது எங்கிருந்தீர்கள்.. தெருவில் நின்றிருக்க வேண்டாமா?.. காங்.க்கு ராகுல் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    MUMBAI RAINS | வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை! மீட்பு பணிகள் தீவிரம்- வீடியோ

    மும்பை: மும்பை வெள்ளக்காடாக காட்சியளித்த போது எங்கே இருந்தீர்கள் என்றும் தெருவில் நின்றிருக்க வேண்டாமா என காங்கிரஸ் தலைவர்களை ராகுல் காந்தி கடுமையாக கடிந்து கொண்டார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    இந்த நிலையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக ராகுல் காந்தி கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை ஆர் எஸ் எஸ் தொடர்ந்தது.

    மூத்த நிர்வாகிகள்

    மூத்த நிர்வாகிகள்

    இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்றைய தினம் ஆஜராகுமாறு ராகுலுக்கு சம்மன் வழங்கியிருந்தது நீதிமன்றம். அதன்படி அவர் மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருடன் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    வெள்ளக்காடு

    வெள்ளக்காடு

    அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் கடிந்து கொண்டதாக தெரிகிறது. அவர் கூறுகையில் நான் மும்பை வருகிறேன் என்பதால் இங்கு வந்துள்ளீர்கள். இதே மும்பையே வெள்ளக்காடான போது எங்கே போயிருந்தீர்கள்.

    கட்சியை வளர்ப்பது

    கட்சியை வளர்ப்பது

    ஒரு கட்சியாக மக்களோடு மக்களாக தெருவில் நின்று அவர்களுக்கு உதவியிருக்க வேண்டாமா. அவர்கள் அதைத்தானே நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். இப்படியிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது? என கேட்டார்.

    பலப்படுத்துவது

    பலப்படுத்துவது

    அப்போது மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் விவரிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ் அம்பேத்கர் அல்லது ராஜ் தாக்கரேவுடனான கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது ராகுல், அரசியல் கூட்டணிகளை கடந்து கட்சியை எப்படி பலப்படுத்துவது என யோசிங்கள்.

    மும்பை மக்கள்

    மும்பை மக்கள்

    கட்சியை எப்படி பலப்படுத்துவது என்பது குறித்து மட்டும் நீங்கள் ஏன் பேச மாட்டீர்கள் என கடிந்து கொண்டார். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோதிலும் இன்னும் அதே கண்டிப்புடன்தான் இருக்கிறார். கட்சியை பலப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என கார்கேவிடம் ராகுல் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்களும் மும்பை மக்களுக்கு ஏன் உதவவில்லை என கேட்டார்.

    English summary
    Congress Ex President Rahul Gandhi asked Congress leaders that where were you when Mumbai sinks?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X