மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கன மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. பழைய கட்டிடங்கள் இடிந்துவிழ வாய்ப்பு- ஐஎம்டி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பழைய கட்டிடங்கள் இடிந்து விழ வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

மும்பை மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கன மழை மற்றும் வெள்ளத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் கன மழை நான் ஸ்டாப்பாக கொட்டி வருகிறது மும்பையில். கொலாபா பகுதியில் 3 மணி நேரத்தில் 57.7 மி.மீ மழை பெய்தது.சாந்தா குரூஸ் பகுதியில் 11.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவிகே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ஊழல்.. ஜிவிகே ரெட்டி மீது பாய்ந்தது சிபிஐ வழக்கு

கட்டிடங்கள்

எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கனமழை முதல் அதிக மழை பெய்யும் நிலையில், பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் வெளியில் நடமாடுவதை குறைக்கவும் ஐஎம்டி அறிவுறுத்தியுள்ளது. குறைந்தது இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்படும் என்றும் ஐஎம்டி எச்சரித்துள்ளது.

அடிப்படை வசதிகள்

நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. எனவே குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை சேவைகளுக்கு குறுகிய காலத்திற்கு இடையூறு ஏற்படலாம் மற்றும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படலாம். முக்கிய சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது

மழை அளவுகள்

மழை அளவுகள்

ஐஎம்டியின் கணக்கீடுபடி, 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழைப்பொழிவு கனமழை என்று கருதப்படுகிறது, 24 மணி நேரத்தில் 204.5 மி.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு என்பது மிகவும் கனமழை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

ஆரஞ்சு அலர்ட்

"வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடும் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்த இடங்களில் குடிமக்கள் மற்றும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று ஐஎம்டி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Mumbai woke up to a rainy morning as several areas of the city and its adjoining coastal districts received heavy rainfall on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X