மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனி நபர் கடன் இ.எம்.ஐ.களை 3 மாதத்திற்கு ஒத்தி வையுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: அனைத்து வகை கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

Recommended Video

    RBI has reduced the Cash Reserve Ratio by 100 basis points.

    கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியவர்கள் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ்களை அறிவித்தார். இது தவிர அந்தந்த மாநில அரசுகளும் ரேஷன் கடை வாயிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

    RBI announces 3-month moratorium on EMI installments of all term loans

    ஆனால், மத்தியதர வர்க்கத்திற்கு, சாதகமாக ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. எனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ளார் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    மத்தியதர வர்க்கத்தினர் பலரும் இன்ஸ்டால்மென்ட் அதாவது இஎம்ஐ மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். இப்போது பணிக்கு செல்ல முடியாமல் விடுமுறையில் இருப்பதால் அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனியார் துறை வங்கிகள் உட்பட வணிக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. அனைத்து வகை தனி நபர் கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்க ஆர்பிஐ அனுமதி வழங்குகிறது. இதை வராக்கடனாக கருதக்கூடாது. கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது. சிபில் ஸ்கோரில் சேர்க்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது ஜூன் மாதம் வரை இ.எம்.ஐ கட்டுவதை ஒத்திப்போடலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    வங்கி கடனை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை குறைப்பது, தாராளமாக கடன்கள் வழங்குவது உள்ளிட்ட 4 அம்சங்கள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

    English summary
    RBI announces 3-month moratorium on EMI installments of all term loans
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X