மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடி தடை.. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு

Google Oneindia Tamil News

மும்பை: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி என்ற தனியார் வங்கிக்கு மோசடி புகார் காரணமாக ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

அண்மைக்காலமாக வங்கிகள் மோசடி புகார் காரணமாக சிக்குவதும், ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் செயல்படும் பிஎம்சி வங்கிக்கு தடை விதித்து. அதன்பிறகு இரண்டு பெரிய தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால் தடை விதிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த வங்கி ஜனவரி 10ம் தேதி முதல் அடுத்த 6 மாதத்திற்கு புதிததாக டெபாசிட்டுகளை பெறவோ, பணத்தை மொத்தமாக வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்த எடுக்க அனுமதிக்கவோ கூடாது.

ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது? ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது?

கடன் வழங்க தடை

கடன் வழங்க தடை

இதேபோல் கடன் வழங்குதல், முதலீடு செய்வது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் எதிலும் அடுத்த 6 மாதத்திற்கு ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி ஈடுபடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பணம் எடுக்க கட்டுப்பாடு

பணம் எடுக்க கட்டுப்பாடு

இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு 35000 ரூபாய்க்கு மேல் எடுக்க எடுக்க தடை விதித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்குமுறை சட்டம்

ஒழுங்குமுறை சட்டம்

ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35 ஏ மற்றும் 56 பிரிவுகளின் கீழ் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

எதுவும் செய்யக்கூடாது

எதுவும் செய்யக்கூடாது

ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹரா வங்கி அதன் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் விவகாரத்தில் , ஜனவரி 2, 2020 அன்று அறிவுறுத்தப்பட்டதைத் தவிர்த்து, அதன் சொத்துக்களை விற்கவோ, இடமாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது" என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

English summary
the Reserve Bank of India has issued certain Directions to Sri Gururaghavendra Sahakara Bank Niyamitha, Bengaluru, Karnataka whereby, as from the close of business on January 10, 2020, the aforesaid bank shall not, without prior approval of RBI in writing grant or renew any loans and advances, make any investment, incur any liability including borrowal of funds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X