மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கி ரிசர்வ் ரேட்டை 100 புள்ளிகள் குறைத்தது ஆர்பிஐ.. பணப் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா பொருளாதார பாதிப்பை தடுக்க 4 அம்ச திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.

Recommended Video

    RBI has reduced the Cash Reserve Ratio by 100 basis points.

    கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    RBI has reduced the Cash Reserve Ratio by 100 basis points.

    கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட குறையும்.
    20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் நிசசயம் குறையும்.

    ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கைக் குழு கூட்டத்தை மார்ச் 25 முதல் மார்ச் 27 வரை முன்னெடுக்கிறது

    விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் அதிகரிக்கும், உலகளாவிய மந்தநிலை இந்தியாவுக்கு பாதகமான தாக்கத்தை அதிகரிக்க கூடும்.

    ரெப்போ விகிதம் 75 பாயிண்ட்ஸ் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு.. வீட்டு கடன் வட்டி குறைய வாய்ப்புரெப்போ விகிதம் 75 பாயிண்ட்ஸ் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு.. வீட்டு கடன் வட்டி குறைய வாய்ப்பு

    நிச்சயமற்ற நிலைமைகளின் காரணமாக பணவீக்கம் மற்றும் வளர்ச்சித் திட்ட நம்பர்களை நாங்கள் இப்போது வழங்கவில்லை. கடன் வழங்குதல், பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வங்கிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். நாம் கண்ணுக்கு தெரியாத கொலையாளியுடன் போராடுகிறோம்.

    ரெப்போ வீதக் குறைப்பு போன்றே கேஷ் ரிசர்வ் ரேட்டையும், குறைத்துள்ளது ஆர்பிஐ. 100 அடிப்படை புள்ளிகளை ஆர்பிஐ குறைத்துள்ளது. எனவே ரிசர்வ் வைத்திருக்க வேண்டிய தொகை வங்கிகளுக்கு குறையும் என்பதால், அதிக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் கடன் கொடுக்க முடியும். அடுத்த ஓராண்டுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும்.

    ரூ.3.74 லட்சம் கோடி கூடுதலாக சமூகத்தில் புழக்கத்திற்கு வருவதற்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    RBI has reduced the Cash Reserve Ratio by 100 basis points. RBI has cut the liquidity adjustment facility by 90 bps to 4%.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X