மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல்.. 95% மொபைல் வாலட்கள் முடங்கும் அபாயம்! உங்கள் பணம் ஜாக்கிரதை

Google Oneindia Tamil News

Recommended Video

    ரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல், வாலட்கள் முடங்கும் அபாயம்- வீடியோ

    மும்பை: ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு அடுத்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு மொபைல் வாலட்கள் இயங்காமல் போகும் சூழ்நிலை உள்ளது.

    டிஜிட்டல்மயம், பணபரிவர்த்தனை போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன மொபைல் வாலட்கள். தள்ளுபடிகள் பலவும் வழங்குவதன் காரணமாக இவற்றின் மீது வாடிக்கையாளர்களுக்கு தனி ஆர்வம் உள்ளது.

    சாதாரண தள்ளுவண்டி கடைகளில் கூட , இப்போது மொபைல் வாலட் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

    விண்ணப்பம்

    விண்ணப்பம்

    இந்த நிலையில்தான், 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)' என்ற விண்ணப்பத்தை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து அவர்கள் குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறை வகுத்தது. பிப்ரவரி இறுதியுடன், இந்த விதிமுறை நிறைவடைய உள்ள நிலையில் பல்வேறு மொபைல் வாலட்களும், இன்னும் வாடிக்கையாளரிடம் அவர்கள் குறித்த தகவல்களை பெறவில்லை.

    பேடிஎம் பிரச்சினையில்லை

    பேடிஎம் பிரச்சினையில்லை

    அதேநேரம் பிரபலமாக உள்ள பேடிஎம் வாலட் ஏறத்தாழ 70% வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி எனப்படும் விவரத்தை சேகரித்து வைத்துள்ளதால் அதன் சேவை முடங்காது என்று கூறப்படுகிறது.

    மார்ச் மாதம்

    மார்ச் மாதம்

    ஆனால், புதிதாக வந்த பல வாலட் நிறுவனங்களுக்கும் சிக்கல் உள்ளதால், 95 சதவீத வாலட்கள், மார்ச் 1ம் தேதி முதல் செயல்படாமல் போக வாய்ப்பு உள்ளது.

    உங்கள் பணம் உஷார்

    உங்கள் பணம் உஷார்

    மொபைல் வாலட்டில் மிச்சம், மீதி பணம் அதிக அளவுக்கு இருந்தால் இப்போதிருந்தே அவற்றை செலவிட ஆரம்பிப்பது நல்லது. முடக்கம் அமலுக்கு வந்தால் அந்த பணத்தை செலவிட முடியாது என்பதே இதற்கு காரணம். ரிசர்வ் வங்கி விதிமுறையை அவை பூர்த்தி செய்துள்ளது உறுதியானதும், ரீசார்ஜ் செய்துகொண்டால் நல்லது என கூறுகிறார்கள், வணிக போக்கின் கவனிப்பார்கள்.

    English summary
    Most of India’s mobile wallets may become non-operational by March, say payments industry executives, as they fear companies will be unable to meet the central bank’s deadline to complete verification of all customers by the end of February 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X