மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.. வங்கி வட்டி குறையாது

Google Oneindia Tamil News

மும்பை: வங்கி ரெப்போ விகிதம் 4% மாக மாற்றமின்றி தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதித்துறை சார்ந்த கொள்கைகளில் ஆய்வு மேற்கொண்டு, அவற்றில் மாற்றங்களை கொண்டு வருகிறது ரிசர்வ் வங்கி.

Repo rate will continue as 4%, says Reserve Bank of India Governor Shaktikanta Das

அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பாதிப்பை மனதில் வைத்து, தொடர்ச்சியாக பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கமிட்டி ஆய்வுக்கு பிறகு சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வங்கி ரெப்போ விகிதம் 4% மாக மாற்றமின்றி தொடரும். ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.3% என்ற அளவுக்கு மாற்றமின்றி தொடரும் என்றார் அவர். இதன் மூலம், கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது. ரெப்போ என்பது, ரிசர்வ் வங்கியில், வணிக வங்கிகள் பெறும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி சதவீதம் ஆகும். அதை குறைத்தால், வாடிக்கையாளர்களுக்கான கடன் மீதான வட்டியையும் வணிக வங்கிகள் குறைக்க வாய்ப்பு உருவாகியிருக்கும்.

English summary
Monetary Policy Committee maintains status quo, keeps repo rates unchanged as 4%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X