மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு

Google Oneindia Tamil News

மும்பை: பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்து தங்களது டிஆர்பியை அதிகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டிய நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க ரிபப்ளிக் டிவி முடிவு செய்துள்ளது.

விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதுதொடர்பாக இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Republic TV decides to ask Rs 200 crore for damage of reputation in TRP scam

அதில் ஒருவர் வீடுகளுக்கு செட் டாப் பாக்ஸ் நிறுவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். வீடுகளுக்கு வழங்கும் செட் டாப் பாக்ஸில் தங்கள் சேனலை மட்டுமே மக்கள் அதிகம் பார்ப்பது போல் காட்டி டிஆர்பி ரேட்டிங் மோசடியை நடத்தியதாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி மற்றும் இரு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளைஸ்பூன் முதல் ஏசி வரை.. தேக்கடி ரிசார்ட்டில் ரூ 3 கோடி பொருட்கள் லொடுக்கு பாண்டி ஸ்டைலில் கொள்ளை

இதை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து டிஆர்பியில் தனியார் செய்தி நிறுவனங்களின் தலையீடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. அது போல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எப் ஐ ஆரில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை மும்பை போலீஸாரும், மகாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து மும்பை கமிஷனர் பரம்பீர் சிங் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அர்னாப் கோஸ்வாமி முடிவு செய்துள்ளார். அதில் ரூ 100 கோடி அர்னாப் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், ரூ 100 கோடி ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயரை டேமேஜ் செய்த காரணத்திற்காகவும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எஃப் ஐஆரில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படாததால் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான ரிபப்ளிக் டிவி எந்த தவறையும் செய்யவில்லை என தெரியவந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Republic TV decides to proceed legally Rs 200 crore against Mumbai police chief for damaging reputation in TRP scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X