மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதாரம் சரியில்லைதான்.. நல்லாயிரும்னு நினைங்க, நல்லாயிரும்! ரிசர்வ் வங்கி ஆளுநர் செம ஐடியா

Google Oneindia Tamil News

மும்பை: இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளபோதிலும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் நேர்மறை மனநிலைதான் இந்த பிரச்சினையில் இருந்து மீட்க உதவும் என கூறியுள்ளார்.

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தொழில்துறை அமைப்பு FICCI இன்று, ஏற்பாடு செய்த வங்கித் துறை மாநாடான FIBAC இல் சக்திகாந்ததாஸ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய மனநிலை, கோபம் முதல் நேர்மறையான அணுகுமுறை வரை மாறி மாறி உள்ளது.

 அந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள் அந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்

ஊடகங்களில் எதிர்மறை செய்திகள்

ஊடகங்களில் எதிர்மறை செய்திகள்

செய்தித்தாள்களைப் படிக்கும்போது அல்லது வணிகச் செய்தி சேனல்களைப் பார்த்தபோது, ​​அந்த மனநிலை போதுமான அளவு நேர்மறையானதாகவும் நம்பிக்கையுடனும் இல்லை என்பது புரிந்தது. பொருளாதாரத்தில் சவால்கள் இருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளார்கள், துறை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணருகிறார்கள், கடுமையான வெளிப்புற உலகளாவிய நெருக்கடிகள் இருப்பதையும் ஒருவர் உணர்ந்துள்ளார். இந்தியா தனிமையில் வாழ முடியாது.

நல்ல மூட் தேவை

நல்ல மூட் தேவை

ஒவ்வொரு சிரமத்தையும் சிரித்தபடி உச்சபட்ச நேர்மறை எண்ணத்தோடு கடந்து செல்லுங்கள் என்று நான் கூறவில்லை. ஆனால், உண்மையான பொருளாதாரத்தில், மனநிலை (Mood) என்பது மிகவும் முக்கியமானது. நமக்கு முன்னால் உள்ள வாய்ப்புகளைப் பாருங்கள். வெளி மற்றும் உள்நாட்டிலிருந்து சவால்களும் சிரமங்களும் இருப்பதை உணர்ந்திருக்கிறோம், ஆனால் நீங்கள் அதில் உள்ள, வாய்ப்புகளைப் பார்த்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சக்தி காந்த தாஸ் பேசினார்.

உண்மை நிலை

உண்மை நிலை

ஆனால், உண்மையிலேயே, நேர்மறை எண்ணம் மட்டுமே, பொருளாதாரத்தை மீட்டுவிடுமா என்ற சந்தேகத்தை பொருளாதார வல்லுநர்கள் எழுப்புகிறார்கள். ஏனெனில், பல ஆய்வு அறிக்கைகள் இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டிற்கான 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியுள்ளன. இது நிதியாண்டு, 7 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெறும் ஆண்டாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி இல்லை

ஏற்றுமதி இல்லை

பொருளாதார வளர்ச்சியின் நான்கு முக்கிய விஷயங்களில் ஒன்று ஏற்றுமதி. ஆனால் இந்தியாவின் ஏற்றுமதி, சராசரியாக ஒரு மாதத்திற்கு 25 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019 ஜூன்வரை, இந்த விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லை. இதுவும் பொருளாதார மந்தநிலைக்கு ஒரு காரணமாகும்.

English summary
Despite the slowdown in the Indian economy, Reserve Bank Governor Shaktikanta Das has said that a positive attitude will help to recover from the problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X