மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு 14 நாட்கள் காவல்.. ஜாமீனும் நிராகரிப்பு.. நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் சந்தேகம் தெரிவித்து பீகார் போலீசில் அளித்த புகார் அளித்தார். இதையடுத்து சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ரியாவின் வாட்ஸ் அப் பதிவுகள் படி, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுஷாந்தும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.முன்னதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வந்தது. இதனால் தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

என்ன வேகம்.. அவசர சட்டம் .. அபராதம் யார் யாரெல்லாம் விதிப்பார்கள்.. பட்டியலை வெளியிட்ட தமிழகஎன்ன வேகம்.. அவசர சட்டம் .. அபராதம் யார் யாரெல்லாம் விதிப்பார்கள்.. பட்டியலை வெளியிட்ட தமிழக

போதைப்பொருள் பயன்பாடு

போதைப்பொருள் பயன்பாடு

.போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

போதை கும்பலுடன் தொடர்பு

போதை கும்பலுடன் தொடர்பு

அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் அண்மையில் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் கூறினார்.

போதை தடுப்பு பிரிவு

போதை தடுப்பு பிரிவு

இந்தநிலையில் 2வது நாளாக நேற்றும் நடிகை ரியா பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினார் அவரிடம் சுமார் .8 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகை ரியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்னர் ஆதாரங்கள் அடிப்படையில், நடிகை ரியா சக்ரபோர்த்தியை மும்பையில் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கைது செய்தனர்.

ஜாமீனும் நிராகரிப்பு

ஜாமீனும் நிராகரிப்பு

அதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ரியா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.அத்துடன் ரியா சக்ரபோர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் காவலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இன்று இரவு அவர்களது லாக்கப்பில் இருக்க போகும் ரியா. நாளை பைக்குல்லா சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

English summary
Rhea Chakraborty sent to 14-day judicial custody, court rejected her bail plea. She was arrested by Narcotics Control Bureau (NCB) today in drug case related to Sushant Singh Rajput's death probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X