மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பை மாலையாக போட முயன்ற இர்வின்... அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே மாதிரி முகத்தில் 'நச்'

பாம்பை அசால்டாக தூக்கிப் பிடித்து அதை தோளில் தூக்கி மாலையாக போட முயன்ற போது முகத்தில் கொத்தினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் அப்பாவிற்கும் மகனுக்கும் ஒரே மாதிரி நடந்துள்ளது. ஆனால் நடந்த காலங்

Google Oneindia Tamil News

மும்பை: இளம் கன்று பயமறியாது என்பார்கள். ராபர்ட் இர்வினுக்கு பாம்புகளும் முதலைகளும் விளையாட்டு பொம்மைகளைப் போல இருக்கிறது. அப்பாவுடன் இரண்டு வயதில் இருந்தே பாம்புகளுடன் விளையாடியவர்தானே. இப்போது 16 வயதாகிறது. பாம்பை பிடித்து தோளில் மாலையாக போட முயன்ற போது அது முகத்தில் நச்சென்று முத்தமிட்டு கொத்துகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராபர்ட் தனது அப்பாவிற்கும் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று கூறி அதையும் போட்டிருக்கிறார். ராபர்ட் இர்வினின் அப்பா வேறு யாருமல்ல 90 கிட்ஸ்களுக்கு பழக்கமான ஸ்டீவ் இர்வின்தான்.

விலங்குகள், பறவைகள், பாம்புகள், முதலைகளை பார்ப்பது என்றால் பலருக்கும் பிரியம்தான். அந்த விலங்குகளுடன் வாழ்ந்து மறைந்தவர்தான் ஸ்டீவ் இர்வின். பாம்பு, முதலைகளைப் பிடித்து அவற்றோடு விளையாடுவார். எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டார் ஸ்டீவ் இர்வின். அவரைப்போலவே அவரது மகனும் பாம்புகளுடனும், முதலைகளோடும் விளையாடி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவரது அப்பாவிற்கு நடந்தது போலவே இப்போது அவரது மகனுக்கும் நடக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

Robert Irwin Shares Video fun memories of a very similar situation

ராபர்ட் இர்வின் தன் தந்தையைப் பெருமைப்படுத்தும் விதமாகத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பதிவுகளை போட்டிருக்கிறார். சமீபத்தில் போட்ட இந்த பாம்பு கொத்திய வீடியோ பதிவு பல லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது. பலரும் பாராட்டி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

முதலைகள் ஆர்வலரான ஸ்டீவ் இர்வின் தொலைக்காட்சிகளுக்குப் பல ஆவணப்படங்களைத் தயாரித்து வழங்கியவர். அவர் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி தன்னுடைய 44வது வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் ஸ்டிங்ரே என்ற மீன் தாக்கியதால் ஏற்பட்டது. ஸ்டீவ் இர்வினுக்கு ராபர்ட், பிண்டி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராபர்ட்டும் பிண்டியும் தற்போது தங்கள் தந்தை நடத்திவந்த ஆஸ்திரேலிய காட்டுயிர் அருங்காட்சியகத்தில் வாழ்கின்ற 1200-க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பராமரித்து வருகின்றனர்.

16 வயதான ராபர்ட் இர்வின், ஒரு வீடியோவுடன் தன் தந்தையின் வீடியோவையும் அந்தப் பதிவில் வெளியிட்டுள்ளார். ராபர்ட் தற்போது அனிமல் பிளானட் டிவிக்காக கிரிக்கி என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். இர்வின் லைப் இன் லாக் டவுன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் பாம்பை காப்பாற்றி காட்டிற்குள் விடுவதுதான். அதை பையில் இருந்து எடுத்து தனது தோள் மீது மாலையாக போட முயலும் போது அது முகத்தில் நச் சென்று ஒன்று வைக்கிறது. அதற்கு அடுத்து ஓடும் வீடியோ காட்சியில் அப்பா ஸ்டீவ் அதுபோல ஒரு பாம்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அது முகத்தில் கொத்துகிறது. கடிபட்ட இடத்தில் ரத்தம் வழிய விடாமல் பேசுகிறார் ஸ்டீவ். என்ன ஒரு ஒற்றுமை.

English summary
After a snake rescue with this cheeky carpet python while filming for ‘Crikey! It’s the Irwins’ it brought back fun memories of a very similar situation that happened decades before in one of the original crocodile hunter documentaries!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X