மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுடன் கூட்டணிக்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீண்டும் எங்களை அணுகினர்: உத்தவ் தாக்கரே

Google Oneindia Tamil News

மும்பை: பாஜகவுடன் கூட்டணிக்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தங்களை மீண்டும் அணுகியதாகவும் ஆனால் தாங்கள் அதனை நிராக்கரித்துவிட்டதாகவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏக்கள் விலைபோவதைத் தடுக்க சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் சொகுசு விடுதிகளில் இம்மூன்று கட்சி தலைவர்களும் முகாமிட்டு பேசி வருகின்றனர்.

RSS is contacting us again for alliance with BJP, says Uddhav Thackeray

மேலும் எம்.எல்.ஏக்கள் தங்கும் சொகுசு ஹோட்டல்களையும் மாற்றி வருகின்றனர். ஹோட்டலில் தங்கியிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

பாஜகவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்காக என்னை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்களது வேண்டுகோளை நான் நிராகரித்துவிட்டேன்.

அஜித் பவார் சொல்வதெல்லாம் பொய்.. பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. சரத்பவார் திட்டவட்டம்அஜித் பவார் சொல்வதெல்லாம் பொய்.. பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.. சரத்பவார் திட்டவட்டம்

தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் நம்முடன் இருக்கிறார். அதனால் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நாம் மூன்று கட்சிகளும் இணைந்தே போராடுவோம்.

English summary
Shiv Sena President Uddhav Thackeray said that RSS is contacting us again for alliance with BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X